அலமாரி: ஆப்பிரிக்க அமெரிக்க நூல்கள்



THE FIRE NEXT TIME // JAMES BALDWIN
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய எழுத்தாளரான ஜேம்ஸ் பால்ட்வின், இலக்கியம், சினிமா ஆகியவற்றை தீவிரமாக விமர்சித்து எழுதிவந்த ஆளுமை. 1963 ஆம் ஆண்டு வெளியான இவரின் The Fire Next Time நூல் முக்கியமானது. இதில்  பதினான்கு வயதான சிறுவனுக்கு எழுதும் கடி தமும், இரண்டாவது பகுதியில் தன் இளமைக்கால போராட்டங்களையும் தந்தையுடனான உறவுச்சிக்கலையும் எழுதியுள்ளார்.

BETWEEN THE WORLD AND ME // TA-NEHISI COATES
ஜேம்ஸ் பால்ட்வின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளரான  கோட்ஸ்  எழுதிய நூல்  இது. தனது  மகனுக்கு அமெரிக்காவின்  வெள்ளை  இன வாதம் பற்றிக் கூறுவதாக  எழுதப்பட்ட நூல் இது. கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தில் நிகழ்ந்த, நிகழப்போகும் கறுப்பர்கள் மீதான வன்முறைகளை கேள்விக்குள்ளாக்குகிறார் கோட்ஸ்.

THE WARMTH OF OTHER SUNS:
THE EPIC STORY OF AMERICA’S GREAT MIGRATION // ISABEL WILKERSON

அமெரிக்காவின் ஜிம் க்ரோ சட்டத்திலிருந்து  தப்பிக்க  ஆப்பிரிக்க  அமெரிக்கர்கள்,  வடக்கு மற்றும் மேற்குப் பகுதி நகரங்களுக்கு  தப்பிச்செல்வதை விவரிக்கும் நூல் இது. புலிட்சர் வென்ற  முதல்  ஆப்பிரிக்க  அமெரிக்க  பெண்  இவரே.  புளோரிடா, மிசிசிபி, லூசியானா  பகுதி
களைச்சேர்ந்த மூவரின் வாழ்க்கையைப் பேசும் நூல்  இசபெல்லின் 15  ஆண்டுகால  ஆராய்ச்சியில் உருவானது.