மருந்தில்லாத குறைபாடு!புற்றுநோய், சர்க்கரைநோய் ஆகியவற்றுக்கான மருந்துகள், சிகிச்சைகள் இன்று அவற்றை கட்டுப்படுத்தும்  அளவிலேனும்  உருவாகியுள்ளன. ஆனால் மூளையில் ஏற்படும் குறைபாடான  டிமென்ஷியாவுக்கு இன்றும் மருந்து கண்டறிவதில் சுணக்கம் உள்ளது. அமெரிக்காவில் டிமென்ஷியா குறைபாடுகளால் 2050 ஆம்  ஆண்டில்  மட்டும் 1.6  கோடி  நோயாளிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. 

உலகெங்கும் அடுத்த இருபது ஆண்டுகளில்  5  கோடி  மக்கள்  டிமென்ஷியா குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் இது இருமடங்காக அதிகரிக்கும். 1906 ஆம் ஆண்டு டாக்டர் அல்ஸீமர், டிமென்ஷியா குறைபாட்டைக் கண்டறிந்தார். அமெரிக்காவில் 
இந்நோயின் சந்தை மதிப்பு 30 பில்லியன்.

இந்தியாவில் டிமென்ஷியா குறைபாட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் அளவு 41 லட்சம்  (2015). உலகிலுள்ள நாடுகளில் அதிகளவு டிமென்ஷியா பாதிப்பு கொண்ட  நாடுகளில்  இந்தியாவின் இடம் மூன்று.  முதல்  இடத்தை சீனாவும்,  அடுத்த  இடத்தை  அமெரிக்காவும்  பிடித்துள்ளன.  டிமென்ஷியாவின் வகைகள்: அல்ஸீமர்  நோய், வஸ்குலர் டிமென்ஷியா, லெவி  பாடி டிமென்ஷியா, ஃப்ரான்டோ  டெம்போப்ரல்  டிமென்ஷியா.