சர்ச்சை ஆன்மிகவாதி!



எட்கர் ஆலன் போ “Mellonta Tauta” என்ற நாவலில் ஜாக்சன் டேவிஸை  நக்கல் செய்திருப்பார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆன்மிக  டூப் சாதனைகளுக்காக இன்றும் நினைவுகூரப்படுபவர் ஜாக்சன் டேவிஸ்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன் டேவிஸ் (1826-1910). குடிகாரத் தந்தையை நம்பாமல் டேவிசும் அவரின் சகோதரியும் சில்லறை வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டினர். கிடைத்த நேரங்களில் ஷூ தயாரிப்பு உதவியாளர்.

பின் 1830 ஆம் ஆண்டு ஆன்டன் மெஸ்மர் என்ற ஜெர்மனி மருத்துவர் காந்தங்களின் மூலம் நோய்களை குணமாக்கும் முறையை செயல்படுத்தி வந்தார். அதை காப்பி செய்து மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் கூடுதலாக சேர்த்து டேவிஸ் குணப்படுத்தும் ஷோ நடத்தி ஏராளமாக பணம் சேர்த்தார்.

The Magic Staff, The Principles of Nature, Her Divine Revelation, and A Voice to Mankind ஆகிய புத்தகங்களை எழுதி தன் மருத்துவமுறையை பிரபலப் படுத்தி கடும் கண்டனங்களை சந்தித்தார். பின்னாளில் டாக்டர் லைசென்ஸ் வாங்கியவர், நோயாளிகளுக்கு  சிகிச்சை
யளித்ததோடு Poughkeepsie Seer என்ற பெயரையும் பெற்றார்.