சார் போஸ்ட்!
தபால்பெட்டி ஆபத்து!

வீட்டில் முன்னாடியே வைத்திருக்கும் தபால்பெட்டி என்றாலும் தொப்பி, ஜோல்னாபை என சுற்றும் தபால்காரரை நாய்கள் சும்மா
விடுமா? எனவே வெளிப்புறத்தைவிட உட்புறம் உள்ள போஸ்ட்பாக்ஸ்களை திறப்பதில் கவனம் தேவை. நாய் உங்களை அட்டாக்  செய்யும்போது, சடக்கென  ஜோல்னாபையை  நுன்சாக்காக பயன்படுத்தி உயிர்தப்பி ஓடலாம்.

எக்சர்சைஸ் வேண்டாம்!

தபால்களை பட்டுவாடா செய்வதே  உடற்பயிற்சிதான் பாஸ்!  வெட்டுக்கிளி கால்களும் ஆட்டோமேடிக்காக நடந்து சைக்கிள் பெடல் செய்து கட்டழகு கால்களாக மாறிவிடுவதோடு டயட்டின்றி எடையும் குறையும். பார்சல் கிப்ட்கள் தொடர்புடையவருக்கு பரம சந்தோஷம் தந்தால்  தீபாவளி, பொங்கல்  என டிப்ஸ்களும் எக்ஸ்ட்ரா கிடைக்கும். 

ஊர்க்காவலன்!

வயதான பெற்றோர்களுக்கு கடிதம்  அனுப்புகிறீர்கள். கொண்டுவரும் தபால்களைப் பெற வீட்டுக்காரர் வரவில்லை எனில் உடனே உதவி கோரி சம்பந்தப்பட்டவர் நலமாக இருக்கிறாரா என்பதையும் தபால்காரர் உறுதி செய்கிறார்.  இன்று மவுசில்லை என்றாலும்  நினைத்துப் பார்க்கக்  கூடிய உறவு தபால்காரர்களிடம் உங்களுக்கும் இருக்கும்.