அதிசய பேஜ் தெரபி!



கடந்தாண்டு  ஏப்ரலில், சான்டியாகோ  மருத்துவக்கல்லூரியில் தீவிர தொற்றுநோய் பாதிப்பில் அட்மிட்டான நோயாளிக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனளிக்கவில்லை. கோமாவில் விழுந்தவர் இறப்பின் மிக அருகிலிருந்தார். அப்போது ட்ரையலாக bacteriophages   எனும்  பாக்டீரியா  உண்ணும்   வைரஸை உடலில் செலுத்த,  மருத்துவ மிராக்கிளாக   பேஷன்ட்  பிழைத்தார். 

எஃப்டிஏ  இச்சிகிச்சையை பயன்படுத்த அனுமதி தந்ததோடு விவசாயத்துறையிலும் கால்நடைகளிலும் பயன்படுத்த பர்மிஷன் தந்துவிட்டது.   ஐரோப்பிய யூனியன் தீப்புண் களை ஆற்ற பாக்டீரியா தின்னி வைரஸ்களை பயன்படுத்த சோதனைகளைத் தொடங்கியுள்ளது. 

1919 ஆம் ஆண்டு பிரான்சின் பாரீசிலுள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டில்  பெலிக்ஸ் ஹெரல்லே வயிற்றுப்போக்கு தீராத, சிறுவனுக்கு பாக்டீரியாதின்னி (Phage therapy) வைரஸை உடலில் செலுத்தி குணமாக்கினார்.

1915 ஆம் ஆண்டே பேஜ்தெரபியை ஃபெலிக்ஸ் கண்டறிந்தாலும் முறையான கல்வி இல்லாததால் இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதன் இன்னொரு வடிவாக 1945 ஆம் ஆண்டு பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆனால்  இன்று  ஆன்டிபயாடிக்குகளை  பாக்டீரியாக்கள் எளிதாக எதிர்க்கத்  தொடங்கிவிட்டதால் மாற்று வழியாக பேஜ் தெரபி உதவும்.ஆராய்ச்சிகள்தொடர்ந் தால் மட்டுமே பேஜ் தெரபி யிலுள்ள சேமிப்பு, அதன் இயக்கம் குறித்த சந்தேகங்கள் தீரும்.