கஞ்சா இழையில் பிசினஸ்!குவைத்தைச்சேர்ந்த எல்ஸ்டன் மற்றும் பென்சன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிப் படிப்பிற்காக பெங்களூரு சென்றனர். தங்கி படிக்கும்போது லீவில்  நேபாளம்  சென்ற நண்பன் திரும்பி வரும்போது கொண்டு வந்த பர்ஸ் கஞ்சாவின் இழை  தயாரிப்பு என்று சொல்ல ஆச்சரியமானார்கள். மருந்துகள், கார் உதிரிப்பாகங்கள் என ஏறத்தாழ 30 ஆயிரம் பொருட்கள் கஞ்சா செடி இழைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

நேபாள அரசு கஞ்சா இழை பொருட்களை குடிசைத்தொழிலாகச் செய்ய மக்களை ஊக்குவிக்கிறது. 2012 ஆம் ஆண்டில் கஞ்சா இழைகளில் பொருட்களைச் செய்து பெங்களுருவில்  ஸ்டால் போட்டபோது, கடைக்கு போலீஸ் என்கொயரிக்கு  வந்துவிட்டது.  மூன்று  ஆண்டுகளுக்குப்  பிறகு பிஈ ஹெம்ப் என்ற இவர்களின் நிறுவனம் பேக், ரிஸ்ட் பேண்ட்ஸ், துணிகள், சீனா மற்றும் ஸ்பெயினிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து விற் கிறார்கள்.

ஒருவார விற்பனை ரூ.60 ஆயிரம். பொருட்களில் Tetrahyrdocannabinol (THC)  என்ற வேதிப்பொருளின் அளவு 0.3 கிராம் இருக்கவேண்டும் என்பதே  சர்வதேச விதி.  இந்தியாவில் இதன் அளவு 2-3 கிராம் இருப்பது இங்குள்ள  சட்டப்படி போதைப்பொருள் பிரிவில் வராது.  உலகெங்கும் உள்ள கஞ்சா இழை பொருட்களின் பிஸினஸ் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய்.  இந்தியாவிலும் Boheco, BE hemp உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இப்பொருட்களை விற்கவென ஸ்டார்ட் அப்களாக உருவாகி வளர்ந்து வருகின்றன.