சுப்ரீம் ராணுவ சோதனைகள்!
உடலே கவசம்!

கடலின் ஆழத்திலும் பாதிப்படையாத கடல் சிங்கத்தின் ரத்த ஓட்டம், 34 ஆயிரம் அடி வரை பறக்கும் வாத்தின்(Anser indicus) திறன் ஆகியவற்றை வைத்து  அமெரிக்காவின்  DARPA டீம்  வெயில், மழை, பனி, வேதிப்பொருள், நோய், கதிர்வீச்சு, விண்வெளி என அத்தனையிலும் தாக்குப்பிடிக்கும் சூப்பர் ஹீரோவை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

உறங்காத போராளி

தூக்கம் நல்லதுதான். மும்முரமான போரில் வீரர் தூங்கிவிட்டால் என்னாகும்? எனவே தற்போது அமெரிக்கா தூங்காமல் இருக்க Modafinil எனும் மருந்தை வீரர்களிடம் சோதித்து வருகிறது. வீரர்களை நாற்பது மணிநேரம்  தூங்காமல் வைத் திருக்க இம்மருந்து உதவும். மூளையில் காந்த அலைகளைப் பயன்படுத்தி தூங்காமல் வைத்திருப்பது குறித்த ஆராய்ச்சியும் அங்கு நடந்து வருகிறது.

தொலைவில் உணர்தல்!

இஎஸ்பி பவரை அமெரிக்காவின் பென்டகன் நம்புவதோடு இந்த  ஆராய்ச்சியில் 20 மில்லியன் டாலர்களைக் கொட்டியுள்ளது. எதிரி நாட்டின் அணு  உலைகள்,  ஆயுதங்களை  ரோலிங்  சேரில் உட்கார்ந்தபடியே கனவு கண்டுகண்டுபிடிக்க முடியுமா என குருட்டுத்தனமான ஐடியாவை ட்ரை செய்த காலம் 1972-1996.  பின்னர் 2002 ஆம் ஆண்டு  சிஐஏ  வெளியிட்ட  தகவல்களினால் இந்த ஆராய்ச்சியை  உலகம்  படித்து குலுங்கிக் குலுங்கி  சிரித்தது.
 
வாயுவில் சோதனை!

1963-70 வரை அமெரிக்கா ப்ராஜெக்ட் 112 என்ற பெயரில் Sarin, Vx உள்ளிட்ட வாயுக்களை அதற்கான தன்னார்வலர்களிடம் சோதனை செய்தது. ஜெர்மனியில் பயன்படுத்தப் பட்ட ஆர்கனோ பாஸ்பேட்டிலிருந்து உருவானதே உயிர்க்கொல்லி வாயு சரின். இதோடு  சல்பர் குடும்பத்தைச் சேர்ந்த மஸ்டர்ட்  வாயு  ஆய்வையும் இரண்டாம் உலகப்போரின்போது  அமெரிக்காவின்  பென்டகன்  சீக்ரெட்டாக செய்து வந்தது.