புத்தகம் புதுசு!
The Truth as Told by Mason
Buttle by Leslie Connor
pp336,
Katherine Tegen Books  

பள்ளியில் தனக்காக படிக்கவே பினாமி தேடும் நிலையிலுள்ள மேஷன் படில் என்ற கற்றல் குறைபாட்டுச்  சிறுவனின் கதை  இது.  கதையினூடே  தன்னம் பிக்கை,  சுய அடையாளத்தை மீட்பது உள்ளிட்ட விஷயங் களைச் சேர்த்து பக்காவாக சிறுவர்களுக்கான அற்புத நூலாக படைத்திருக்கிறார் லெஸ்லி கானர். நண்பன் பென்னியின் இறப்பு, கால்வின் தொலைந்து போவது என மேஷனுக்கு வரும் பிரச்னைகளிலிருந்து அவன் மீள்வதே சுவாரசிய மையம்.
  
Shadow Weaver
by MarcyKate Connolly
pp308,
Sourcebooks Jabberwocky  

சிறுமி எம்மிலைனுக்கு நிழல்களைக் கட்டுப்படுத்தும் அசாதாரண சக்தி உண்டு. முதலில் பயப்படுத்தினாலும் எம்மி லைனின் நிழலான தார் அவளின் தோழியாகவும் மாறுகிறது. திடீரென தோழி வில்லியாகும் போது என்னாகும்? அதேதான் எம்மிலைனுக்கும் நேர்கிறது. நிழல், பயம், திகில் என உணர்வு களைக் கலந்து சுவாரசியமாக இந்நூலை மார்சிகேட் கனோலி எழுதியுள்ளார்.