மனிதர்கள் இசையை உருவாக்கியது எப்போது?ஏன்?எதற்கு?எப்படி?

அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட புல்லாங்குழலின் வயது 40 ஆயிரம் ஆண்டுகள். யானையின் தந்தத்திலும், எலும்பிலும்  உருவான இசைக் கருவி இது.பண் பலைகளில் பாடலைக் கேட்டு சிலிர்த்து மகிழ்வதும்,  கிறங்குவதும் மொழியை பேசத்தொடங்கிய காலத்திலேயே நிகழ்ந்திருக்கலாம் என்கிறார் விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வின்.

படிம வடிவில் கிடைத்த நம் முன்னோர்களின் உறுதியான பெரிய தொண்டை எலும்புகளும் இதனை உறுதிபடுத்துகின்றன.  மகிழ்ச்சியையும், துயரத்தையும் இசை தனியே தூண்டுவதில்லை.

அவை மனிதர்களுக்குள் புதைந்திருக்கும் நினைவுகளை சாவியாய் திறக்க, அந்நினைவுகள்  கொண்டாட்டமோ அல்லது துயரோ அதுபோலவே மனநிலை அமைகிறது. ஒலியின் மூலம்  சூழலை  உணர்ந்து  வாழ்வது ஆதிகாலத்தின்  சர்வைவல் ரகசியம்.

Mr.ரோனி