ரியலா?ரீலா?



ரீல்: பூமியில் ஓரிடத்தை மின்னல்  ஒருமுறை மட்டுமே தாக்கும்.மின்னல் தாக்குதல்களுக்கு லிமிட் கிடையாது. உயரமான கட்டிடங்கள் எளிதாக தாக்கப் படும் வாய்ப்பு அதிகம். அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த ராய் சுலிவன் என்ற ரேஞ்சர் தன் வாழ்நாளில் ஏழுமுறை மின்னலால் தாக்கப்பட்டுள்ளார்.

ரீல்:  சப்ளிமென்ட்ஸ் நம்மை ஆரோக்கியமாக  வைத்திருக்கும்.உணவு வழியாக சத்துகள் உருவாவதே  ஆரோக்கியம்.  இயற்கையாக கிடைக்காத 
சத்துகளால் ஏற்படும் குறை பாடுகளைத் தீர்க்கவே சப்ளிமென்ட்ஸ். எனவே இவற்றை மருத்துவரின்  பரிந்துரை  தவிர்த்து சாப்பிட்டால் ஆபத்து உறுதி.

ரீல்: பனிச்சூழல் நமக்கு நோயை ஏற்படுத்தும்.பனி, மழை என ஈரமான சூழலால் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மனிதர்களின் நெருக்கத்தினால் நோய்கள் பரவ வாய்ப்புண்டு. குளிர்ந்த  சூழலில் ரினோ, கொரோனா, ஃப்ளூ வைரஸ்கள் பரவுகின்றன என்
பதற்கு உறுதியான  எந்த  ஆதாரங்களும் இல்லை.