சோலார் ட்ரெயின்!ஆஸ்திரேலியாவில் பைரோன் பே ரயில்பாதையில் சோலார் ரயில் விரைவில் தடதடத்து பாயவிருக்கிறது. நியூசவுத் வேல்சிலுள்ள பைரோன் பே கிழக்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. 5 ஆயிரம் பேர் வாழும் நகரமான இங்கு ரயில் சர்வீஸ் 3 கி.மீ தூரத்தை கவர் செய்கிறது. சிட்னி மற்றும் வடக்கு ஆஸ்திரேலிய ஆற்றுப் பகுதி களையும் இணைக்கும் 132 கி.மீ பயணத்தில் சிறிய பகுதிதான்.

“நாடு முழுவதும் சல்லடை போட்டு தேடி வின்டேஜ் ரயிலைக் கண்டுபிடித்து சரி செய்து  எலக்ட்ரிக்  பயணத்துக்கு ரெடி செய்துள்ளோம்” என்கிறார் பைரோன் பே திட்ட இயக்குநர் ஜெர்மி ஹோல்ம்ஸ். சோலார் முறையிலும் எமர்ஜென்சிக்கு டீசல் எஞ்சின்  மூலம் இயங்கும் வாய்ப்பும் உள்ளது.

சவுத்வேல்சில் 200 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி கிடைக்கும். அதனைச் சேகரித்து பயன்படுத்தும் பேட்டரிகள் இருக்க பயமெதற்கு? மலிவான சூரிய ஆற்றலை பயன்படுத்துவதால் சூழலுக்கும் கேடில்லை என்பதால் விரைவில் ட்ரெயின் பாய்ந்து செல்லப்போகிறது.