தற்கொலையைத் தடுக்கும் கீட்டமைன்!



மன அழுத்தத்தை குறைத்து தற்கொலை எண்ணங்களை தடுப்பதில் கீட்டமைன் சிறப்பாக செயல்படுவதை அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அனஸ்தீசியா மருந்தான கீட்டமைன் முதல் இருபத்து நான்கு மணிநேரத்தில் ஏற்படுத்திய விளைவாக தற்கொலை  எண்ணத்தை  குறைப்பதை  கூறினாலும், கான்கிரீட்  உண்மையாக  அதனை ஏற்க முடியாது.

“கீட்டமைன் முன்பே மன அழுத்த  மருத்துவத்தில் பயன்பட்டாலும், தற்கொலை எண்ணங்களை  குறைப்பது  உறுதியானால் பின்னாளில் மருத்துவத்துறையில்  இதன் பயன்பாடு முக்கியத்துவம் பெறும்” என்கிறார் ஆராய்ச்சியாளரான மைக்கேல்  க்ரூனேபாம். 1960 ஆம் ஆண்டு அனஸ்தீசியா  மருந்தாக  ராணுவ  வீரர் களுக்கு  உதவிய  கீட்டமைன் பின்னாளில்  பார்ட்டி ட்ரக்காக  மாறியது. 1995-2015 வரையிலுமான  காலத்தில் அமெரிக்காவில் 26.5 சதவிகிதமாக தற்கொலை செய்பவர்களின்  எண்ணிக்கை  அதிகரித்துள்ளது.