பார்க்கின்சனுக்கு உதவும் லேசர் ஷூக்கள்!பார்க்கின்சன் நோயாளிகளின் முக்கிய பாதிப்பு, சரியாக தரையில் கால்பதித்து  நடக்கும் திறன் பாதிக்கப்படுவதுதான். தற்போது  இப்பிரச்னைக்கு தீர்வாக ட்வென்டே மற்றும் ராட் பவுட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் லேசர் ஷூக்களை பரிந்துரைத்துள்ளனர்.

பார்க்கின்சன் பாதிப்புள்ளவர்கள் நடக்கவேண்டுமென நினைத்து நடந்தாலும் மேற்புறமுள்ள உடல் நகருமே ஒழிய, கால் அதற்கு ஒத்துழைக்காது. இதன் விளைவாக நடக்க முயல்பவர் கீழே விழும் நிலை ஏற்படும்.

ஆராய்ச்சியாளர்களின் புதிய  லேசர் ஷூக்கள், தரையில் சிவப்பு நிற  ஒளியை பாய்ச்சும். இதனை கண்களால் பார்த்து மூளையில் பதிய வைத்துக்கொண்டால் அதனை நோக்கி ஈஸியாக நகரலாம். “பத்தொன்பது பார்க்கின்சன் நோயாளிகளிடம் நடத்திய  சோதனையில்  46 சதவிகித  வெற்றி  கிடைத்திருக்கிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர்  ம்யூரியெல்  ஃபெராயே.