கண்களுக்கு ஸ்டெம்செல் சிகிச்சை!



உலகின் முதல் முறையாக ஜப்பானியர் ஒருவருக்கு கண்களில் உள்ள ரெட்டினா செல் மாற்று அறுவைசிகிச்சை  வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.  ஸ்டெம்செல் வங்கியில் தோல் அணுக்களை (IPS Cells) பெற்ற ரைகென் ஆராய்ச்சிக்கழகம், கோபே நகர மருத்துவ மையம் மற்றும்  மருத்துவமனை,  கியோட்டோ ஐபிஎஸ்  ஆராய்ச்சி  மருத்துவமனை மையம் ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள்  இந்த புதுமையான  அறுவைசிகிச்சையினை  சாதித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டவருக்கு வயது 60. தசைச்சிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, பார்வையிழப்பு ஏற்படும் அபாயமுமிருந்தது. நோய் எதிர்ப்பு அமைப்பு ரெட்டினா செல்களை  ஏற்றுக்கொண்ட நபர்களுக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இவர்களின முன்னேற்றம்  தொடர்ந்து 1 ஆண்டுக்கு கண்காணிக்கப்படவிருக்கிறது.

“நாங்கள் இந்த முயற்சியில் பாதிதூரம்தான் கடந்துள்ளோம். இன்னும்  இதில் நெடுந்தூரம் செல்லவேண்டியுள்ளது” என உற்சாகமாகப் பேசுகிறார் ஆய்வுத்தலைவர் மஷாயோ தகாஹாஷி. ஐபிஎஸ் ஸ்டெம்செல்கள் ஆப்பரேஷன்கள் பெருமளவிலான அமெரிக்காவில்  நடந்துவரும் நிலையில் ஜப்பானின் இந்த  முயற்சி, அத்துறையில் அதற்கு பெருமைமிக்க முதலடியாகும்.