ட்ரைடோவில் விளையாடு!



கார், லாரி, ட்ரெய்ன் என இன்னொருவரின் கற்பனையில் உருவானதை எத்தனை நாள்தான் உங்கள் குழந்தைக்கு வாங்கிக் கொடுப்பீர்கள்? குழந்தைகளின் ஐ.க்யூவை எல்லையின்றி வளர்க்க  வந்திருக்கிறது  ட்ரைடோ மேக்னடிக் பில்டிங் பொம்மை. பிளடோனிக் முறையில் உருவானது இது. ‘ஆராய்ச்சியின் முக்கியமான வடிவம் விளையாட்டு’ என ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் கூறியிருப்பது ட்ரைடோவுக்கு  பொருந்தும். 

இதனுடைய தனித்துவ வடிவமைப்பு கொண்ட ஒவ்வொரு பக்கமும், மற்றொரு பக்கத்தை ஈர்க்கிறது. இதிலுள்ள ஸ்பெஷல் நியோடியம் காந்தத்தினால் அனைத்து பக்கங்களும் செல்போனும் சிம்முமாக அப்படியொரு பொருத்தம். நான்முகம், எண்முகம், பாதி நான்முகம் கொண்டவை   ட்ரைடோவின்  ஸ்பெஷல்.

கற்பனை, தீர்வறிதல்,  பகுத்தறிதல், குறிப்பாக சந்தோஷம் உள்ளிட்டவற்றை ட்ரைடோ அள்ளித்தருவதோடு  மன  அழுத்தத்தை குறைக்கும் கிரியேட்டிவிட்டி ஆயுதம்கூடத்தான். பல்வேறு நிறங்களில்  கிடைக்கும் ட்ரைடோவின் விலை ரூ. 2,236