சீனாவில் பாகிஸ்தானின் கழுதை!



கழுதை ட்ரான்ஸ்போர்ட் பிளானின் பாஸ் நம் பங்காளி பாகிஸ்தான்தான். 1 பில்லியன்  மதிப்பில்  சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான்  திட்டமிட்டுள்ளது. கைபர் - பாக்துன்க்வா  பகுதியில் இத்திட்டம்  செயல்படவிருக்கிறது. தற்போது இருநாடுகளுக்குமிடையேயான வர்த்தக  மதிப்பு 46 பில்லியனாகும். சீனாவில் மருந்துப்பொருட்களைக் கொண்டு செல்ல உதவும் மலிவான போக்குவரத்திற்கு கழுதை கேரண்டி தருவதால் அதற்கு  இப்போது பெரும் மவுசு.

அரசு உதவியுடன் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும்   திட்டமிது. கழுதைகளை மார்க்கெட்டிங் செய்வதற்கான 2 நாள் கண்காட்சி  விரைவிலேயே  நடைபெறவிருக்கிறது. “இந்த கழுதை ஏற்றுமதி திட்டத்தின் மூலம்  கழுதை  வளர்க்கும்   இனக்குழுக்கள்  வளம்  பெறவும், உள்நாட்டுக்  கழுதைகள் அதிகளவு  வளர்க்கப்படவும்  வாய்ப்புள்ளது. இது  கழுதைகளைக் காப்பதற்கான திட்டம் என்பதோடு  வருமானம் தரும்  வாய்ப்பும் கூடத்தான்” என்று தன்னம்பிக்கையோடு  பேசுகிறது இந்த ஒப்பந்த அறிக்கை.