26 ஆண்டு கின்னஸ் சாதனை!



ஸ்காட்லாந்தின் 21 வயது இசையமைப்பாளருக்கு புற்றுநோய். கீமோதெரபி ஆண்மையைப் பொசுக்கிவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்க, உடனே இன்ஸ்டன்டாக   அன்றே  தன் விந்துவை  பாதுகாப்பாக  உறைநிலையில்  சேஃப்டி  செய்துவிட்டார்.  இடையில்  மணமானவருக்கு  குழந்தை ஆசை எழ, 2010  இல் வைத்த  உறைநிலை விந்துவை கம்போஸர் தன் மனைவிக்கு செலுத்த  சுடச்சுட அவரும் கர்ப்பமானார். அந்த ஆண்டிலேயே ஆண், பெண் என ட்வின்ஸ்.

உச்சமகிழ்ச்சியில் திளைத்தவருக்கு  அப்போதுதான் தெரிந்தது,  அவர் 26 ஆண்டுகள் தன் விந்தணுவைப் பாதுகாத்து  வந்திருக்கிறார் என்று. இதற்கு முந்தைய சாதனை, 24 ஆண்டுகள் விந்தணுவை  பாதுகாத்ததுதான். உடனே கின்னஸ் சாதனைக்கு போன் அடித்து சொல்லி விட்டார் இந்த ஆசாமி.

விந்தணுவை செயற்கையாக பதப்படுத்தி பாதுகாக்கலாம்  என்றாலும் அதற்கு ஆயுள் 40 ஆண்டுகள்தான் என்கிறது கருத்தரித்தல் மைய ஆணையத்தின் செய்திக்குறிப்பு. இவற்றிலும்  சக்தியோடு  இருக்கும்  விந்தணுக்களின் அளவு குறைவுதான். உலக சாதனைடா சாமி!