உலகம் சுற்றும் விமானம்!



முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம், முழுமையாக இந்த உலகை ஒரு சுற்று வலம் வந்து முடிக்க இருக்கிறது.

அபுதாபியிலிருந்து கிளம்பிய இது, ஒவ்வொரு நாடாகப் பயணித்து, இன்னும் சில தினங்களில் மீண்டும் அபுதாபியை அடைய உள்ளது. எகிப்தின் பிரமிடுகளின்மீது சோலார் இம்பல்ஸ் 2 பறந்தபோது எடுத்த படம் இது!