அட்டகாசமான ஆகஸ்ட் மாதம்!



ஆறாவது என்னும் பொருள்படும் செக்சிடிலீஸ்  (Sextilis) என்னும் லத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது.

காரணம் கி.மு 753ல் ரோமுலஸின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் மார்ச் மாதம் முதலாவது மாதமாக இருந்தது. அந்த வரிசையில் ஆகஸ்ட்  மாதம் ஆறாவது மாதமாக இருந்தது.

நூமா பொம்பிலியஸின் ஆட்சியில் - அதாவது கி.மு. 700ம் ஆண்டில் முதலாவதாக இருந்த மார்ச் மாதத்திற்கு முன்னதாக ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இணைக்கப்பட்டன. இதனால் மார்ச் மூன்றாவது மாதமாகியது.

ஆகஸ்ட் எட்டாவது மாதமானது. அப்போது ஆகஸ்ட் மாதத்திற்கு  29 நாட்கள்தான் இருந்தன.கி.மு 45ம் ஆண்டில் ஜூலியஸ் சீஸர் ‘ஜூலியன் நாட்காட்டி’யை அறிமுகப்படுத்தியபோது மேலும் 2 நாட்கள் சேர்க்கப்பட்டு  31 நாட்கள் ஆனது.

கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சாண்ட்ரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் அகஸ்டஸ் சீஸரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக ‘செக்சிடிலீஸ்’ என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகஸ்ட் எனப் பெயரிடப்பட்டது.

ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்

5- நண்பர்கள் நாள்
1-8 - தாய்ப்பால் வாரம்
6-ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்ட நாள்
8- வெள்ளையனே வெளியேறு தினம்
12 - உலக இளைஞர்கள் தினம்
13 - சர்வதேச இடதுகைப் பழக்கமுள்ளவர்கள் தினம்
14 - பாகிஸ்தானின் சுதந்திர தினம்
15 - இந்தியாவின் சுதந்திர தினம்
15 - உழைக்கும் பெண்கள் தினம்
19 - உலக மனிதநேய தினம்
19 - உலகப் புகைப்பட தினம்
22 - சென்னை மாநகரம் பிறந்த தினம்
29 - தேசிய விளையாட்டு தினம்
30 - சிறுதொழில் தினம்

பிரபலங்களின் பிறந்த தினங்கள்

1 - மீனா குமாரி (இந்தி நடிகை)
2-ஆபிரகாம் பண்டிதர் (தமிழ்க் கவிஞர்)
4 - கிஷோர் குமார் (இந்தி நடிகர், பின்னணிப் பாடகர்)
4-பராக் ஒபாமா (அமெரிக்க ஜனாதிபதி)
5- கிருபானந்த வாரியார் (பக்தி சொற்பொழிவாளர்)
5 - ராஜா சர் முத்தையா (கல்வியாளர்)
7- எம்.எஸ்.சுவாமிநாதன் (விஞ்ஞானி)
10-வி.வி. கிரி (குடியரசுத் தலைவர்)
12-விக்ரம் சாராபாய் (விண்வெளி விஞ்ஞானி)
13 - ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா அதிபர்)
15-நெப்போலியன் போனபார்ட் (பிரான்ஸ் அதிபர்)
15-சர் வால்டர் ஸ்காட் (ஆங்கில எழுத்தாளர்)
15-அரவிந்தர் (தத்துவஞானி)
17 - கே.பி.சுந்தராம்பாள் (பாடகி)
17 - வி.எஸ்.நைபால் (நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்)
19 - ஆர்வில் ரைட் (ஆகாய விமானம் கண்டுபிடிப்பாளர்)
19 - தீரர் சத்தியமூர்த்தி (அரசியல்வாதி)
19 - சங்கர் தயாள் சர்மா (குடியரசுத் தலைவர்)
20 - ராஜீவ் காந்தி (பிரதமர்)
21 - ப.ஜீவானந்தம் (கம்யூனிச சிந்தனையாளர்)
26 - அன்னை தெரசா (சமூக சேவகி)
27 - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (ஆங்கில நாடக ஆசிரியர்)
29 - தயான் சந்த் (ஹாக்கி வீரர்)

நினைவு தினங்கள்

1 - பால கங்காதர திலகர் (சுதந்திரப் போராட்ட வீரர்)
7 - ரவீந்திரநாத் தாகூர் (கவிஞர்)
18 - சுபாஷ் சந்திர போஸ் (சுதந்திரப் போராட்ட வீரர்)
19 - ஜேம்ஸ் வாட் (நீராவி என்ஜின் கண்டுபிடித்தவர்)
21 - பிஸ்மில்லா கான் (ஷெனாய் கலைஞர்)
26 - எஸ்.எஸ்.வாசன் (திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர்)
30 - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் (நகைச்சுவை நடிகர்)

முக்கிய நிகழ்வுகள்

1.8.1971 - அப்போலா விண்கலம்
நிலவில் இறங்கி ஒரு முக்கிய பாறையைக் கண்டுபிடித்த நாள்.
3.8.1954 - இந்தியாவில் அணுசக்தியைப் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துவதற்காக அணுசக்தி கமிஷன் அமைக்கப்பட்டது.
5.8.1962 - பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ மர்மமான முறையில் இறந்தார்.
6.8.1945 - அமெரிக்க விமானப்படை விமானம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது முதல் அணுகுண்டை வீசியது. (மூன்று நாட்களுக்குப் பிறகு
(9-8-1945) நாகசாகி நகரத்தின் மீது
மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டது.
10.8.1963 - காமராஜர் திட்டம்
(மூத்த அரசியல் தலைவர்கள் பதவியை விட்டு விலகி கட்சிப்பணியாற்றல்) அறிமுகப்படுத்தப்பட்டது.
11.8.1961 - தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி போன்றவை இந்திய யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
11.8.2000 - ஜார்கண்ட் மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.
15.8.1947 - இங்கிலாந்து  ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை  பெற்றது.
பிரதமராக ஜவஹர்லால் நேருவும், குடியரசுத் தலைவராக  ராஜேந்திர பிரசாத்தும் பொறுப்பேற்றனர்.
15.8.1972 - இந்தியாவில் தபால் குறியீட்டு எண் (பின்கோடு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
15.8.1982 - இந்தியத் தொலைக்காட்சி தேசிய அளவில் முதல்முறையாக வண்ண ஒளிபரப்பைத் தொடங்கியது.

- சீ.சுப்பிரமணியன், தூத்துக்குடி.