நம்பினால் நம்புங்கள்



* பூனைகளால் இசையை ரசிக்க முடியும். பூனை வகைகள் தகவல் பரிமாற்றம் செய்யும் அலைவரிசையிலேயே இசை அமைந்திருப்பதே இதற்குக் காரணம்.

* ‘சிறுநீர் கழிப்பதை அடக்க முடியாத பிரச்னை’ உலகில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கிறது.

* பல் சிகிச்சை அளிக்கும் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் பார்க்கும் வகையில் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

* நடுத்தர அளவிலான உடற்பயிற்சிகளால் மனச்சோர்வை குணப்படுத்த முடியும். பிற்காலத்தில் மனச்சோர்வு ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.



* மூளையில் காயம் ஏற்பட்டவர்களின் நினைவாற்றலை திரும்பப் பெற இசை உதவுகிறது.

* ஐரோப்பிய யூனியனில் 2011ல் மட்டுமே 1.15 கோடி விலங்குகள் ஆய்வகப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

* உலகில் 120 கோடி மக்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் 70 கோடிப் பேர் ஆடுவது ஆன்லைனில்!

* மழைக்கு பயப்படும் மனநிலைக்குப் பெயர் Ombrophobia. இப்பிரச்னை தீவிரமான மனக்கலக்கத்தை உண்டாக்கும்.

* காலில் பலகை கட்டிக்கொண்டு ஆடும் ஹோவர்போர்டு விளையாட்டு, நியூயார்க் நகரத்தில் கடந்த ஆண்டு வரை தடை செய்யப்பட்டு இருந்தது.