உலகின் பிரமாண்ட விமானம்!



அன்டனோவ் An-225 ம்ரியா என்ற இந்த விமானம் சமீபத்தில் இந்தியா வந்தது. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரியது இதுதான். ‘ம்ரியா’ என்ற உக்ரைன் மொழி வார்த்தைக்கு ‘கனவு’ என அர்த்தம். உக்ரைன் நாட்டின் கனவு தயாரிப்பு இது. ஆரம்பத்தில் விண்வெளி ஓடங்களை சுமந்துசெல்ல பயன்பட்ட இது, இப்போது சரக்கு விமானமாக பறக்கிறது. ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றின் உயரத்தில் இருக்கும் இது, சுமார் 640 டன் எடையை சுமந்தபடி பறக்கும் வல்லமை பெற்றது!