உலகின் பெரிய சொகுசுக் கப்பல்!



‘இன்னும் பிரமாண்டமாய்’ என்பதுதான் எல்லோரின் கனவாகவும் இருக்கிறது. நட்சத்திர ஹோட்டலுக்கு உண்டான வசதிகளுடன் கூடிய சொகுசுக் கப்பல்களில் லேட்டஸ்ட், ‘Harmony of the Seas (Oasis 3)’. இப்போது உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பலான இது, கடந்த வாரம் முதல் பயணத்தைத் துவக்கியது. 230 அடி உயரம், 1187 அடி நீளமுள்ள இதில் 6780 பேர் பயணம் செய்யலாம். 20 ஹோட்டல்கள், 23 நீச்சல் குளங்கள் உள்ள இதைக் கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆனது!