நம்பினால் நம்புங்கள்



*lose/lose என்ற பெயரில் ஒரு வீடியோ கேம் உள்ளது. இந்த விளையாட்டில் ஒரு எதிரியை அழித்துவிட்டால், அதற்குப் பழிக்குப் பழியாக உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு ஃபைல் அழிக்கப்பட்டு விடும்!

*இந்தியப் பெருங்கடலில் உள்ளது வடக்கு சென்டினல் எனும் சிறு தீவு. இங்குள்ள பழங்குடி மக்கள் அந்நியர் எவரும் புகாவண்ணம் இன்றுவரை பாதுகாத்து வருகின்றனர்.

*நீண்ட நேரம் கட்டிப் பிடித்துத் தூங்கும் தம்பதிகளுக்கு கை வலிக்காமல், வசதியாக இருக்கும் வகையில் Cuddle Mattress   என்ற மெத்தை வகைகள் தயாரிக்கப் பட்டுள்ளன. 

*ஜப்பானில் சற்று கோணல் மாணலான பற்களே அழகு மற்றும் கவர்ச்சிகரமானதாகக் கருதப் படுகிறது. இதற்காகவே பலரும் நேர்த்தியான பற்களை சிகிச்சை செய்து கோணல் ஆக்கிக் கொள்கின்றனர். இதற்காக டோக்கியோ பல் மருத்துவ மனைகளில் மாணவிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப் படுகிறது!

*மாமியாருக்கு அதீதமாகப் பயப்படும் பிரச்னைக்கு பென்தெரஃபோபியா என்று பெயர்.

*நாட்டு மக்களுக்கு மட்டு மல்லாமல், சுற்றுலாப் பயணி களுக்கும் இலவச வைஃபை இணைய வசதி வழங்கும் முதல் தேசம் - தைவான்.

*கூகுள் தேடுதளத்துக்கு முதலில் (1996)   BackRub   என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டுதான் ‘கூகுள்’ ஆனது.

*உள்ளும் புறமும் வெண்மை யாகக் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஜப்பானில் விளைவிக்கப்படுகின்றன. விதைகள் மட்டுமே சிவப்பு.

*2012ல், ஒரு ஜோடி தங்கள் திருமணத்துக்கு பிரிட்டிஷ் ராணிக்கு விளையாட்டாக அழைப்பிதழ் அனுப்பினார்கள். யாருமே எதிர்பாராவண்ணம் ராணி எலிசபெத்தும், அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் அத்திருமணத்துக்கு வருகை தந்து வியப்பில் ஆழ்த்தி விட்டார்கள்!

*புத்திசாலி மனிதர்களின் தலைமுடியை ஆராய்ந்தபோது, அதில் மற்றவர்களின் தலைமுடியில் இருப்பதை விடவும், அதிக தாமிரமும் துத்தநாகமும் உள்ளது தெரிய வந்தது!