சோம்பேறி தேவாங்கு




*உலகின் மிக சோம்பலான பாலூ ட்டி இனமான தேவாங்கு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

*பெருமளவில் தென் அமெரிக்காவில் மட்டுமே வாழும் விலங்கினம் தேவாங்கு.

*தாவரப்பட்சியான இவை, இலைகளை மட்டுமே விரும்பி உண்ணும்.

*மிக அவசியம் என்றால் மட்டுமே இவை நகரும். ஆபத்து என்றால் மட்டுமே ஓடும். இலைகளில் இருந்து ஊட்டச்சத்து சரியாகக் கிடைக்காததால் இவை சோம்பேறிகளாகவே வாழ்கின்றன. சோம்பேறிகளாக இருப்பதால் இவை தாங்கள் படுத்திருக்கும் மரங்களில் உள்ள இலைகளைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவது இல்லை.

*சோம்பேறியாக இருப்பதும், மிகக் குறைந்த உடல் வெப்பநிலையைக் கொண்டிருப்பதும் இவை ஆற்றலைச் சேமிக்க இயற்கை கொடுத்த ஒரு அமைப்புதான்.

*காலில் மூன்று விரல் கொண்ட தேவாங்கு, இரண்டு விரல் கொண்ட தேவாங்கு என இதில் இரண்டு வகைத் தேவாங்குகள் உள்ளன.

*இரண்டு விரல் தேவாங்குகள், மூன்று விரல் தேவாங்குகளை விட வேகமாக நகரும்.

*பெரும்பாலும் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வரை தூங்கும்.

*இவை நீண்ட நேரம் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும். சாப்பிடுவது, தூங்குவது, குட்டியைப் பெற்றுக் கொள்வது என எல்லாமே தலைகீழாகத்தான்.

*வாரத்திற்கு ஒரு முறைதான் கழிவு நீக்கும். அப்போதும் எப்போதாவதுதான் மரத்தை விட்டு இறங்கும்.

*இவற்றுக்கு ஒழுங்காக நடக்கத் தெரியாது. ஆனால் நன்றாக நீச்சல் அடிக்கும்.

*இவற்றின் ஆயுட்காலம் 10 முதல் 20 வருடங்கள்.

*ஒரு வருடத்திற்கு ஒரு குட்டி மட்டுமே ஈனும். இவற்றின் கர்ப்ப காலம் 5 வாரங்கள்.

*பிறந்த குட்டி தேவாங்கு 25 செ.மீ. நீளமும், 350 கிராம் எடையும் கொண்டிருக்கும்.

*பெரிதானதும் 2 அடி வரை வளரும்.

*ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வாழும்.

*இவற்றின் முக்கியமான எதிரிகள் பெரிய பாம்புகள், கழுகுகள் மற்றும் மனிதர்கள்.

*இவை உண்ணும் இலைகளில் இருந்தே இவற்றுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைத்து விடுவதால் இவை நீர் குடிப்பதே இல்லை. அதற்காக யாராவது ரொம்ப சோம்பலாக இருந்தால் ‘தேவாங்கு’ எனத் திட்டக்கூடாது!

- ஏ.ஹம்சத், கீழக்கரை.