சாதுர்ய ராமன்



பறக்கவே முடியாத ‘கிவி’ பறவையின் பண்பு களை விளக்கிய கட்டுரை அபாரம்.
 எஸ்.நல்லதம்பி, திருநெல்வேலி.

ஒருகாலத்தில் மக்கள் தக்காளிப் பழத்தை விஷப் பொருள் என்று நம்பியதைத் தகர்த்து, அது ஆரோக்கியம் தரும் உணவுப் பொருள்தான் என்பதை வர்ஜீனிய ஆராய்ச்சியாளர் டாக்டர் சிக்கோரி உலகிற்கு உணர்த்தியதை படித்தேன். தக்காளி இருக்கும் வரை சிக்கோரி புகழ் நீடிக்கும்.
 இரா.அருணாராணி, தேனி.

நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமனை மேலை நாட்டில் ஒரு விருந்துக்கு அழைத்து, அவரை மது அருந்துமாறு வற்புறுத்தியபோது ‘‘ஆல்கஹால் மீது ராமன் விளைவைப் பார்த்து விட்டீர்கள்; இப்போது ராமன் மீது ஆல்கஹால் விளைவைப் பார்க்க ஆசைப்படுகிறீர்களா?’’ என்று சொல்லி மதுவை மறுத்தது சாதுர்யம். ‘முத்தான மூன்று விஷயங்கள்’ பகுதி அருமை!
 எல்.சுந்தரி ராஜன், புதுச்சேரி.

‘பூச்சிப் பூக்கள்’ பகுதியில் மத்திய ஆப்ரிக்காவில் மனிதனைக் கடிக்கும் ஈக்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதைப் படித்தபோது உடல் நடுங்கியது. நல்லவேளை, அந்த மாதிரி ஈக்கள் நம் ஊரில் இல்லை. தப்பித்தோம் சாமி!
 ஜெ.காந்திமதி, வேலூர்.