நம்பினால் நம்புங்கள்




*ஒரு புள்ளி அளவு இடத்தை 70 ஆயிரம் அமீபாக்களால் நிரப்ப முடியும். ஒவ்வொரு ஆண்டும் அமீபா சார்ந்த நோய்களால், உலகில் இறப்போரின் எண்ணிக்கையும் அதே 70 ஆயிரம்!

*பொதுவாக தாவரங்கள் நகர்வதில்லை. கிளாமிடோமொனஸ் என்ற ஒரு செல் தாவரத்துக்கு மட்டும் நகரும், நீந்தும் தன்மை உண்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி உள்பட சில பறவைகளால் நடக்க முடியாது.

*முதலையால் அதன் நாக்கை நீட்ட முடியாது.

*குட்டை வில்லோ (Dwarf Willow) & இதுதான் உலகிலேயே மிகச்சிறிய மரம்.   அதிகபட்சம் 6 சென்டிமீட்டர் மட்டுமே வளரும்!

*‘சுறாமீன்களுக்கு கேன்சர் வராது’ என்ற தகவல் உண்மையல்ல என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

*கரடிகளைப் போலவே, பபூன் குரங்குகளும் பிரமாதமாக மரம் ஏறக்கூடியவை!

*பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலின் நீளத்தைப் போல ஒன்றரை முதல் இரண்டு மடங்கு வரை இருக்கும்.

*‘துருவக்கரடிகள் அனைத்துமே இடதுகை பழக்கம் உடையவை’ என்பது தவறு என அக்கரடிகளே நிரூபித்துள்ளன. உணவுத் தேடலுக்கு அவை இரு கைகளையுமே பயன்படுத்துகின்றன!

*ஒசேஜ் ஆரஞ்சு மரம் 350 & 400 ஆண்டுகள் பலன் தரும். இதன் பழத்துக்கும் ஆரஞ்சு பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!