அசத்தும் இந்தியா




* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, ‘பூஜ்ஜிய’த்தை   கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.

* கி.மு. எழுநூறாம் ஆண்டிலேயே இந்தியாவின் தட்சசீலத் தில், உலகின் முதல் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து, 10 ஆயிரத்து 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.

* ஆயுர்வேதம்தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* ‘நேவிகேஷன்’ என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் மற்றும் படகு செலுத்தும் கலையை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. ‘நவ்காத்’ எனும் சமஸ்கிருதச் சொல்லே ஆங்கிலத்தில் ‘நேவிகேஷன்’ என்றானது.

* கணித சாஸ்திரத்தில் ‘பை’ என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள் பித்தகோரஸ் தேற்றத்தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது 6வது நூற்றாண்டிலேயே அதை விளக்கினார் புதையனார்.

* செஸ் விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என இரு பெயரில் அது அழைக்கப்பட்டது.

- பா.ராஜேஷ்