அனிமல் ஆபரேஷன்!



அமெரிக்காவின் சாண்டியாகோ உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படுகிறது ‘பாய் யுன்’ என்ற ஜெயன்ட் ஃபாண்டா. இதன் வாயில் ஒரு பல் உடைந்திருப்பதைக் கண்டுபிடித்து சமீபத்தில் ஆபரேஷன் செய்தார்கள்.

மனிதர்களுக்குச் செய்வது போலவே எக்ஸ்ரே பரிசோதனை செய்து, மயக்க மருந்து கொடுத்து, உடைந்த பல்லில் பூச்சுக்களை வைத்து அடைத்து, அதன்மீது லேசர் ஒளி அடித்து அதை இறுகச் செய்து மூடினார்கள். அந்த ஆபரேஷன் காட்சி இது!