வால் நட்சத்திரத்தில் விண்கலம்



ரொசெட்டா என்கிற ஆளில்லா விண்கலத்தை, தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றில் இறங்கி பரிசோதனைகளைச் செய்வதற்காக ஐரோப்பிய விஞ்ஞானிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

  '67P’   என்று பெயரிடப்பட்டுள்ள, நான்கு கிலோ மீட்டர் அகலம் கொண்ட அந்த வால் நட்சத்திரத்தின் நூற்றுக்கணக்கான படங்களை ஆராய்ந்த பிறகே, ரொசெட்டா இறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் அந்த விண்கலம் தரையிறங்க, ஒப்பீட்டளவில் சமமாகவுள்ள ஒரு இடத்தையே தாங்கள் தேர்ந்தெடுத்து உள்ளதாக, விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஃபிலே என்று அழைக்கப்படும் ஒரு சோதனைக் கருவி, பனிப்பாறைகளைக் கொண்ட தளமொன்றில், திருகாணிகள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு நிலை நிறுத்திக் கொள்ளும்.

அந்த வால் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை மிகவும் குறைவாக உள்ளதால், ரொசெட்டா விண்கலம் அங்கு இறங்கி நிற்பது இயலாத ஒன்று. எனினும் இந்தச் சோதனை முயற்சியில் பல விஷயங்கள் தவறாகப் போகக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த முயற்சி, முற்றாக தானியங்கி இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் செயல்படுத்தப்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

- காவ்யா, சிதம்பரம்.