சினிமாவில் கலக்கிய ரோபோக்கள்



1927ல் வெளிவந்த ‘மெட்ரோ போலீஸ்’ என்ற ஜெர்மானிய மௌனப் படத்தில் முதன்முதலாக ‘மரியா’ என்ற ரோபோ கதாபாத்திரம் அறிமுகமானது. எகிப்திய மம்மி வடிவத்தில் உருவான இந்த கவர்ச்சிகரமான பெண் பாத்திரம், மேலும் பல ரோபோ பாத்திரங்கள் திரைப்படங்களில் இடம்பெற அடித்தளமிட்டது.

‘ஃபார்பிடன் பிளேனட்’ என்ற படத்தில் ‘ரோபி’ என்ற பெயருடைய ரோபோ நடித்தது. 1957ல் வெளிவந்த இப்படத்தில் டாக்டர் மொர்பிஸ் என்ற விஞ்ஞானியின் வேலைக்காரனாக இது நடித்தது.

1977ல் வெளிவந்த ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தில் R2  D2   மற்றும் C  3PO   என்ற பெயரில் இரண்டு ரோபோ கதாபாத்திரங்கள் நடித்தன. இப் படத்தில் இவை லாரல் - ஹார்டி ஜோடியைப் போல் கருதப்பட்டன.

‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படத்தில் ‘பாம்பிளிபீ’ என்ற பெயரில் நடித்த ரோபோ ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

‘வால் - இ’ படத்தில் அதே பெயருடன் வலம் வந்த ரோபோ நல்ல திரைப்படங்களையும் பாடல்களையும் ரசிப்பதாகவும்   மீஸ்மீ   என்ற ரோபோவை காதலிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டது. இது 2008ல் வெளிவந்தது.

‘பைசென்டன்னியல் மேன்’ படத்தில் ஆண்ட்ரூ மார்ட்டின் என்ற பெயரில் உணர்ச்சிகரமான ‘ரோபோ’ பாத்திரம் படைக்கப்பட்டது.

‘ரியல் ஸ்டீல்’ என்ற படத்தில் ‘ஆடம்’ என்ற பெயரில் ஒரு ரோபோ நடித்தது. இந்த ரோபோ குத்துச் சண்டைபோட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

‘பசிபிக் ரிம்’ என்ற சமீபத்திய படத்தில் ஜிப்ஸி டேன்ஜர் என்ற ரோபோ பிரமிக்கத்தக்க சாகசங்களைச் செய்தது.

ஷாருக்கானின் ‘ரா ஒன்’ படத்தில் ‘ஜி ஒன்’ என்ற பெயரில் ஒரு ரோபோ கதாபாத்திரம் நடித்தது.

சன் பிச்சர்ஸ் தயாரித்த ரஜினியின் ‘எந்திரனில்’ சிட்டி என்ற பெயரில் ஒரு ரோபோ கதாபாத்திரம் படைக்கப்பட்டு ரசிகர்களின் பலத்த பாராட்டுதலைப் பெற்றது.

- க.ரவீந்திரன், ஈரோடு.