நம்பினால் நம்புங்கள்




ராக்கெட்டில் பயணித்த முதல் விலங்கினம் - பழ ஈ. 1947ல் ஒரு மக்காச்சோளத்தோடு இந்த ஈக்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன

புவியின் காந்த மண்டலம் விண்வெளியில் 36 ஆயிரம் மைல் தொலைவு வரை பரவியுள்ளது.

உலகில் ஆண்டுதோறும் 5 லட்சம் நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன. அவற்றில் ஒரு லட்சம் மட்டுமே உணரப்படுகின்றன.

கி.பி. 1861-ம் ஆண்டிலிருந்து மக்கள் வானிலையை முறையாகப் பதிவு செய்து இருக்கின்றனர். அதற்கு முன்பு, கி.மு.903லேயே சீன வரலாற்றில் மோசமான வானிலை நிலவியதாக குறிப்புகள் காணப்படுகின்றன

நிலநடுக்க ரிக்டர் அளவு 2 என்பது ரிக்டர் அளவு 1-ஐ விட 10 மடங்கு வலிமையானது.

பர்மாவில் உள்ள dendrocalamus giganteus என்ற மூங்கில் தினமும் ஒரு மீட்டர் உயரம் வளரும். அதன் அருகில் சில மணி நேரங்கள் நின்றாலே அதன் வளர்ச்சி வேகத்தை உணர முடியும்.

சூரிய குடும்பத்திலேயே மிக உயரமான மலை செவ்வாய்க் கிரகத்திலுள்ள மோன்ஸ். 27 கிலோ மீட்டர் உயரம்.

ஒரு கோழியின் வாழ்நாள் கழிவுகளைப் பயன்படுத்தி, 100 வாட் பல்பை 5 மணி நேரம் எரியச் செய்யும் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யலாம்!

பறக்கும்போது தேன்சிட்டு நிமிடத்துக்கு 300-500 முறை சுவாசிக்கிறது.

கலிஃபோர்னியா காண்டர்ஸ் என்ற பறவை சிறகை அடிக்காமலே 10 மைல் தூரம் பறக்கும்.