வசனமே இல்லாமல் ஆஸ்கர்!






நிலவிற்குச் சென்ற கடைசி மனிதர், யூஜீன் செர்னான். சென்ற ஆண்டு 1972.

ஒரு கண்ணை திறந்து வைத்துக் கொண்டே தூங்கும் கடல் வாழ் விலங்கு, டால்பின்.

இந்தியாவின் க்ரைம் நகரம் என்று அழைக்கப் படுவது, காந்தி பிறந்த போர்பந்தர்.

இந்தியாவின் ஒயின் நகரம் என்று அழைக்கப்படுவது, நாசிக்.

ரத்த தானம் செய்வதற்கான வயது வரம்பு, 18 முதல் 60 வயது வரை.

வசனமே இல்லாமல் ஆஸ்கர் விருதை வென்ற ஒரே படம், ‘தி ரெட் பலூன்’. வெளிவந்த ஆண்டு, 1956.

ஐதராபாத்தில் உள்ள சார்மினார், அந்தப் பகுதியில் பிளேக் நோய் ஒழிந்ததை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டது.

குதிரை இரு கண்களால் இருவேறு காட்சிகளைப் பார்க்கும் பிரத்யேகத் திறன் படைத்தது.
- ச.ராஜசேகர், செய்யாறு.