கூந்தல்



வாரம் தவறாத எண்ணெய் குளியலோ, மாதம் தவறாத பார்லர் விசிட்டோ, காஸ்ட்லியானகூந்தல் அழகுப்பொருள் உபயோகமோ மட்டுமே உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துவிடாது. கூந்தலின் அழகுக்கும்ஆரோக்கியத்துக்கும் உணவே மருந்து! ஊட்டச்சத்துகளில் ஒன்று குறைந்தாலும் அது கூந்தலில் வேறு வேறு பிரச்னைகளாகபிரதிபலிக்கும்.

1. கூந்தல் உதிர்வுக்குக் காரணமாகும் ஊட்டச்சத்துக் குறைபாடு

ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

கூந்தலை பாதிக்கிற ஊட்டச்சத்துக்குறைபாடுகளில் முதல் இடம் புரதத்துக்கு. ஃபாலிக்கிள்எனப்படுகிற கூந்தல் நுண்ணறைகளுக்கு ஏராளமான புரதம் தேவை. அதில் குறை ஏற்படும்போது உடனடியாக கூந்தலின் ேவர்ப்பகுதி பாதிக்கப்படும்.Protein - Calorie Malnutrition (PCM)  எனப்படுகிறஇந்தப் புரதக் குறைபாட்டை அதன் தீவிரத்தைப் பொறுத்து4 நிலைகளாகப் பிரிக்கலாம்.

முதல் நிலையில் கூந்தலானது வறண்டு, உயிரே இல்லாமல் காட்சியளிக்கும். சுலபமாக உடைந்து உதிரும். டெலோஜன் எனப்படுகிற கூந்தல் உதிர்வதற்கு முன்பான ஓய்வு நிலைக்கு நிறைய வேர்க்கால்கள் தள்ளப்படும். அடுத்த நிலையானது, தீவிர வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இரைப்பை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் அதிகம்ஏற்படும். இந்த இரண்டு நிலைகளிலுமே கூந்தலானதுசெம்பட்டையாக மாறுவதுடன், ஆங்காங்கே உதிர்ந்து சிதறிய நிலையில் காணப்படும்.

Marasmus  என்பதும் புரதக் கலோரி குறைபாட்டு பிரச்னையே. இது பெரும்பாலும் குழந்தையின் முதல் வயதில் ஏற்படும். கூந்தலானது வறண்டும் மிக மெலிதாகவும் இருக்கும். கூந்தலின் வளர்ச்சி நிலையான அனாஜனில் ஒரு முடி நுண்ணறைகூடஇருக்காது. மொத்தமும் டெலோஜன் என்கிற ஓய்வு நிலையிலேயே இருக்கும்.  Marasmus பிரச்னை தொடருமானால், மொத்த முடியும் கொட்டி விடும். குழந்தையின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்படும்.

Kwashiorkor என்பது இன்னொரு நிலை. இதுகுழந்தையின் 2வது வயதில் தாக்கும். குறைந்த அளவு புரதமும் அதிக கார்போஹைட்ரேட்டும் உள்ள உணவு குழந்தைக்குக் கொடுக்கப்படும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். Marasmus மற்றும் Kwashiorkor என இரண்டு நிலைகளிலுமே கூந்தல் தொட்டாலே உடையும். உதிரும். தலையில் ஒரு பகுதியிலோ அல்லது முழுவதிலுமோ வழுக்கை ஏற்படும். கருப்பாக இருந்த கூந்தல் சிவப்பாக மாறும்.இரும்புச்சத்துக் குறைபாடுகூந்தல் ஆரோக்கியத்துடன் மிக நெருங்கிய தொடர்புள்ளது இரும்புச்சத்து. 

பெண்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவது மிக சகஜமானது. மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்த இழப்பில் இரும்புச்சத்து பெரியளவில் குறையும். இரும்புச்சத்து குறைபாட்டின் முதல் அறிகுறி முடியின் ஆரோக்கியத்தில் தெரியும்.அத்தியாவசிய கொழுப்பு அமிலக் குறைபாடுஉடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களில் குறைபாடு அதிகமாகும் போது, சிலருக்கு புருவங்கள்
மற்றும் மண்டைப்பகுதியில் சிவப்புத் திட்டுகள் காணப்படும். பெரும்பாலான முடிகள் உதிர்ந்து விடும்.

இருக்கும் கொஞ்ச முடியும் வறண்டு, நிறம் மாறி உடையத் தயாராக இருக்கும்.துத்தநாகக் குறைபாடுதீவிரமான முடி உதிர்வு, வழுக்கை போன்ற பிரச்னைகளுக்கு துத்தநாகக் குறைபாடு காரணமாகும் என்பதே பலருக்கும் தெரியாது. அத்தியாவசிய கொழுப்பு அமிலக் குறைபாடும் சரி, துத்தநாகக் குறைபாடும் சரி,  செல்களின் வளர்சிதை மாற்றத்துடன் சம்பந்தப்பட்டவை என்பதால் அவற்றின் விளைவானது கூந்தல் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.மேலே சொன்ன அத்தனை பிரச்னைகளுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சைகளும் தேவை. சுய மருத்துவமோ, வெளிப்பூச்சுகளோ பலன் தராது. ட்ரைகாலஜிஸ்ட் உதவியுடன் ஊட்டச்சத்துக்
குறைபாட்டை சரி செய்கிற உணவுகளை பற்றித் தெரிந்து கொண்டு பின்பற்றலாம்.
தேவைப்பட்டால் மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்டுகளையும் அவர் பரிந்துரைப்பார்.

அனோரெக்சியா நெர்வோஸா(Anorexia Nervosa)உடல் எடை அதிகரித்துவிடக் கூடாது என்கிற பயத்தில் வேண்டுமென்றே பட்டினி இருப்பது, சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது, அளவுக்கதிக உடற்பயிற்சி செய்வது, பேதி மருந்து மற்றும் உடல் இளைப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என சிலர் முயற்சி செய்வதையே அனோரெக்சியா நெர்வோஸா என்கிறோம்.

இது பெரும்பாலும் டீன் ஏஜ் பெண்களையே பாதிக்கிறது. இதன் விளைவால் முடி உதிர்வு அதீதமாக இருக்கும். கூந்தல் ஆரோக்கியத்தைத் தக்க வைக்கும் அளவுக்கு உணவின் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டங்கள் போகாததே காரணம். இது தற்காலிகமான
பிரச்னைதான். ஊட்டச்சத்துக் குறைபாடு சரிசெய்யப்பட்டாலே கூந்தல் ஆரோக்கியத்தை மீட்கலாம். ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை மற்றும் கவுன்சலிங் இரண்டும் இவர்களுக்கு அவசியம்.இரும்புச்சத்துக் குறைபாட்டின் முதல் அறிகுறி முடியின் ஆரோக்கியத்தில் தெரியும்.

2. கூந்தல் வளர்க்கும் 10 உணவுகள்

1. கீரைகள்

தினம் ஒரு கீரை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் அழகாக, அடர்த்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் உள்ள வைட்டமின் பி, சி, ஈ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் என ஒவ்வொன்றுமே கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. குறிப்பாக கீரைகள் உண்பதன் மூலம் ரத்தச் சிவப்பணுக்கள் கூந்தல் நுண்ணறைகளுக்கு ஆக்சிஜனை அதிகம் எடுத்துச் செல்ல வழி வகுக்கப்படும்.

2. சால்மன் மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது குறைந்தால் கூந்தல் வறண்டு பொலிவற்று உயிரற்றுக் காட்சியளிக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது சைவ உணவுகளில் குறைவாகவே இருக்கிறது.  சால்மன் வகை மீன்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கிடைக்கிற ஒமேகா 3, கூந்தல் நுண்ணறைகளுக்கு ஆரோக்கியத்தை அளித்து வளர்ச்சியைத் தூண்டுவதுடன், கூந்தல் பளபளப்பையும் அதிகரிக்கிறது.

3. பருப்பு வகைகள்

புரதக் குறைபாட்டுக்கு மட்டுமின்றி, துத்தநாகக் குறைபாட்டுக்கும் பருப்பு வகைகள் உதவும். புரதம்தான் கூந்தல் ஆரோக்கியத்துக்கான அடிப்படை. சாலட், சூப் என எதில் எல்லாம் முடியுமோ எல்லாவற்றிலும் பருப்பு சேர்த்து உண்பது கூந்தல் ஆரோக்கியம் காக்கும்.

4. சர்க்கரைவள்ளிக் கிழங்கு

எக்கச்சக்கமான பீட்டா கரோட்டின் சத்துகளை உள்ளடக்கியது இது. பீட்டா கரோட்டின் என்பது உடலால் வைட்டமின் ஏ சத்தாக மாற்றப்படக்கூடியது. வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு வறண்ட சருமம் ஏற்பட்டு, அது மண்டைப் பகுதியில்பிரதிபலித்து பொடுகுப் பிரச்னையைஏற்படுத்தும். அதைத் தவிர்க்க சர்க்கரைவள்ளிக் கிழங்கு உதவும்.

5. முட்டை

கூந்தல் ஆரோக்கியத்துக்காக வெளிப்பூச்சாக உபயோகிக்கவும் உள்ளுக்கு சாப்பிடவும் முட்டை உகந்தது. இதில் உள்ள பயோட்டின் என்கிற வைட்டமின் பி, கூந்தலின்
ஆரோக்கியம் மற்றும் பளபளப்புக்கு உதவும்.

6. சிவப்பு கொய்யா

ஒரு கப் கொய்யாவில் 377 மி.கி. அளவு வைட்டமின் சி சத்து கிடைக்கும். தினசரி தேவையைவிட இது 4 மடங்கு அதிகம். வைட்டமின் சி சத்தானது, கூந்தலை உடையாமல் உறுதியாக வைக்கும்.

7. லவங்கப்பட்டை

காபி, ஓட்ஸ் கஞ்சி என எதில் வேண்டு
மானாலும் சிட்டிகை லவங்கப் பட்டைத் தூளைத் தூவிக் குடிக்கலாம். இது ரத்த ஓட்டத்தைத் தூண்டி, கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்தும்.

8. வால்நட்

இதிலுள்ள வைட்டமின் ஈ மற்றும் பயோட்டின் சத்துகள் கூந்தல் வறட்சியைப் போக்கி, உடைவதைத் தடுக்கும்.

9. கேரட்

கண்களுக்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் நல்லது கேரட். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது கூந்தல் அதன் இயற்கையானஎண்ணெய் பசையைத் தக்க வைத்துக் கொள்ள உதவுவதால் வறட்சி தவிர்க்கப்படுகிறது.

10. சிப்பி

உடலுக்கு மிக அவசியத் தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட் துத்தநாகம். அதை அதிகளவில் கொண்டது சிப்பி. மண்டைப் பகுதி யில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை ஆரோக்கியமாக வைக்கவும், ஆங்காங்கே சொட்டை விழுவதைத் தவிர்க்கவும் இது உதவும்.

வி.லஷ்மி