உங்கள் சந்தோஷத்தின் அளவு என்ன?ஆராய்ச்சி

காதல், கல்யாணம் என எதிலும் மாட்டிக் கொள்ளாமல் சிங்கிளாக இருப்பதுதான் சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டு திரிபவரா நீங்கள்?‘ஐயோ பாவம்... தனிமையில் இனிமை காணவே முடியாது... உறவுக்குள் இருப்பவர்களே உற்சாகமானவர்கள்’ என்கிறது ஒரு ஆய்வு.

கல்யாணம், காதல் என கமிட்மென்ட் இல்லாமல் சிங்கிளாக இருப்பவர்களைவிட உறவு வளையத்துக்குள் இருக்கும் ஆண்களே அதிக சந்தோஷத்துடன் இருப்பதாக சொல்கிறார்கள் கார்னல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

“திருமணமோ, காதலோ இருவரின் உறவுக்குள் எவ்வளவு பொறுப்புகள் இருக்கிறதோ, அதே அளவு ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு உணர்வும் அதிகம் இருக்கிறது. இந்த உணர்வால் இருவருக்குள்ளும் ஒரு நீண்ட ஆழமான உறவை வளர்த்துக் கொள்ள முடியும்” என்கிறார் இந்த ஆய்வுக்குழுவின் ஆசிரியரான க்ளேர் கேம்ப் டஷ். சந்தோஷத்தின் அளவு மானியையும் இங்கே கொடுத்துள்ளார்…