லைஃப்ஃபேக்ட் +

மரணத்துக்குப் பிறகு ஏதோ இருக்கிறது என 82 சதவிகித
அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.
சராசரி மனிதன் வாழ்நாளில்
1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடக்கிறான். இது உலகை
3 முறை சுற்றி வருவதற்குச் சமம்.
சராசரி மனிதன் வாழ்நாளில் 6 ஆண்டுகளை கனவு காண்பதில் கழிக்கிறான்.
ஒவ்வொரு சிகரெட்டும் ஆயுள்காலத்தை 11 நிமிடங்கள்
குறைக்கிறது.
70 லட்சத்தில் ஒருவருக்கே,
110 ஆண்டுகளைத் தாண்டி வாழும் வாய்ப்பு கிடைக்கிறது.

உலக வரலாற்றை 24 மணி நேரங்களாகச் சுருக்கிப் பார்த்தோமானால், காலை 4 மணிக்கு உலகம் உதயமானது. தாவரங்கள் இரவு 10:24 மணிக்குத் தோன்றின. இரவு 11:41 மணிக்கு டைனோசர் இனம் அழிந்தது. இரவு 11:58:43 மணிக்கு மனித வரலாறு தொடங்கியது!உலகின் ஒட்டுமொத்த எறும்பு களின் மக்கள்தொகை கணக்கீடு எடுத்தோமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் 16 லட்சம் எறும்புகள் சொந்தமாகும்! அது மட்டுமல்ல... இந்த எறும்புகளின் மொத்த எடை மொத்த மனித குலத்தின் எடைக்குச் சமம்!

நமது உடலில் செல்களைப் போல 10 மடங்கு பாக்டீரியாக்களும் உள்ளன.இங்கிலாந்து பெண்கள் சராசரியாக வாழ்நாளில் 150 ஹேர்ஸ்டைல்களை முயற்சித்துப் பார்க்கின்றனர். 111 ஹேண்ட்பேக்குகளை பயன்படுத்துகின்றனர்.

- சூர்யா