குழந்தை



ஃபேக்ட்

*1838 முதல் 1930 வரை எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பாதிக்கு மேல் குழந்தைகளே!

*பெரியவர்களைக் காட்டிலும் குழந்தையின் உடலில் 60 எலும்புகள் அதிகம் உள்ளன.

*பிறந்த குழந்தையின் உடலில் சுமார் ஒரு கப் ரத்தம் இருக்கிறது.

*மூன்றாம் உலக நாடுகள் நீங்கலாக பிற நாடுகளில், பிறந்தது முதல் டாய்லெட் செல்லப் பழகும் வரை, ஒரு குழந்தைக்கு ஏறத்தாழ 8 ஆயிரம் டயாபர் பயன்படுத்தப்படுகிறது.

*குழந்தை பிறக்கும்போது, அதன் உடலில் பாக்டீரியாக்கள் எதுவும் இருப்பதில்லை.

*முதல் சில மாதங்களுக்கு குழந்தைகள் கறுப்பு வெள்ளையில் மட்டுமே எல்லாவற்றையும் காண்கின்றன.

*முதல் சில ஆண்டுகள் குழந்தைகள் கனவு காண்பதில்லை என நியூரோசைன்டிஸ்ட்டுகள் கூறுகின்றனர்.

*தாய்ப்பால் ஊட்டிய தாய்களுக்கு அல்சீமர் மறதி நோய் ஏற்படும் அபாயம் 22 சதவிகிதம் குறைகிறது.

*பெரியவர்களுக்கு இருப்பதை விடவும் 3 மடங்கு சுவைமொட்டுகள் குழந்தைகளுக்கு உள்ளன.

*குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடதுகை பழக்கம் இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.