உங்கள் ஈறுகளைக் கவனியுங்கள்!



கலர் கலர் என்ன கலர்?

பற்கள் வெண்மையாகஇருக்கிறதா என்பதே பலரின் கவலையும். அதைவிட முக்கியம்உங்கள் ஈறுகளின் நிறம் என்கிறார்கள் பல் மருத்துவர்கள். ஈறுகளில் ஏதாவது வீக்கம் இருந்து கவனிக்காமல் விட்டால், வாய்ப்பகுதியில் உள்ள எலும்புகளில் தொற்று ஏற்பட்டு, பற்களே பறிபோகும்அபாயம் உண்டு என்றும்எச்சரிக்கிறார்கள்.

தினம் இரண்டு முறை பல்துலக்குவது,  பற்களின் இடைவெளியில் சிக்கியிருக்கும் துணுக்குகளை ஃப்ளாஸிங் செய்து அகற்றுவது போன்றவற்றைச் செய்து வருபவர்களுக்கு ஈறுகளை சீரழிக்கும் காறை ஏற்படாது. ஈறுகளின் நிறத்தை வைத்து, அவற்றின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்வோமா?
பிங்க் நிறத்தில் இருந்தால்?

1-5 லேசான சிவப்பு முதல் பவழச் சிவப்பு வரைஇருந்தால் பிரச்னை இல்லை. டார்க் பிங்க் நிறத்தில் காணப்பட்டால் அது கிருமித்தொற்றுஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி.பிரவுன் நிறத்தில் இருந்தால்? 6-9 சருமத்தின் நிறத்தைத் தீர்மானிக்கிற மெலனினின் தாக்கம் ஈறுகளின் நிறத்திலும் பிரதிபலிக்கும். உங்கள் ஈறுகள் பிரவுன் நிறத்திலோ, பிங்க் கலந்த பழுப்பு நிறத்திலோ இருந்தால், ஆரோக்கியம்.

சிவப்பாக இருந்தால்?10-13  ரத்தச் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் அவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். ஈறுகளைச் சுற்றியோ,அவற்றின் அடியிலோ ஏற்பட்டிருக்கிற வீக்கம், பற்காறையை ஏற்படுத்தலாம். அதன் விளைவாகவே அந்த நிற மாற்றம்ஏற்பட்டிருக்கும். இப்படி இருந்தால் உடனடியாகபல் மருத்துவரை பார்க்க வேண்டும்.