உயிர் காக்கும் மருந்துகள்



முதலுதவிப் பெட்டி

மருத்துவர்களின் ஆலோசனை, பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே. ‘அதேவேளையில் சில உயிர்காக்கும் மாத்திரைகளை எந்த நேரமும் உடன் வைத்து இருந்து, ஆபத்தான நேரங்களில் உடனடியாக சாப்பிட வேண்டும்’ என்கிறார் லைஃப் ஸ்டைல் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜி.பக்தவத்சலம்.

தலைவலி, சளி உட்பட பல நோய்களுக்காக, டாக்டரின் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மருந்து வாங்கக் கூடாது. இதனை, மருத்துவர்கள் 'Over The Counter Prescription' என்று குறிப்பிடுவார்கள். சூப்பர் மார்க்கெட் போன்று   பல பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் இடங்களில், தலைவலிக்கான தைலம், பாரசிட்டமால், குரோசின்,

டோலோ650, வைட்டமின் மாத்திரைகள் போன்றவை டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தாராளமாக கிடைக்கும். அதேவேளையில், தூக்க மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், பெனிசிலின், எரித்ரோமைசின் போன்ற மருந்துகளை வாங்கக் கூடாது. வாங்கவும் முடியாது. சட்டப்படி விற்கவும் கூடாது.

மருத்துவ உலகில் சில மாத்திரைகள் உயிர் காக்கும் மருந்துகள் அல்லது முதலுதவி அளிக்கக்கூடிய மாத்திரைகள் ( Loading Dose) எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில், டிஸ்பிரின்  325 மில்லிகிராம் (Disprin 325 mg), அட்டார்வாஸ்டாடின் 80 மில்லிகிராம் (Atorvastatin 80 mg), குளோபிடாப்150 மில்லிகிராம் (Clopitab 150 mg) ஆகியவை மிகமிக முக்கியமானவையாகும். இந்த மூன்று மாத்திரைகளும் சேர்ந்து Loading   Dose என்று அழைக்கப்படுகின்றன.

இந்த உயிர் காக்கும் மாத்திரைகள் வரிசையில், டிஸ்பிரின் 325 mg,  அட்டார்வாஸ்டாடின்  80 mg ஆகியவற்றில் ஒன்றினையும், குளோபிடாப் 150 mg மாத்திரை இரண்டினையும் மாரடைப்பு நோயாளிகள் தங்களுடைய சட்டைப்பை அல்லது பர்சில் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், நாற்பது வயதினைக் கடந்தவர்கள், பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் (80 கிலோவுக்கு மேல்), ரத்தத்தில் தீமை உண்டாக்கும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள், பரம்பரையாக இதய நோய்க்கு ஆட்படுபவர்கள், அதிக மன அழுத்தம் மற்றும் மனச்சுமையோடு வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படப் போவதை முன்னதாகவே எளிதாக அறிந்து கொள்ளலாம். நெஞ்சுப்பகுதியில் அசவுகர்யமான உணர்வு, நெஞ்சு எரிச்சல், உடல் அசதி, செரிமான குறைபாடு, வாந்தி, நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற வலி, அதிக அழுத்தமான நெஞ்சு வலி, தாடை மற்றும் கழுத்துப்பகுதியில் வலி, முதுகு மற்றும் இடது கைக்கு மெல்ல மெல்ல வலி பரவுதல், குளிர்ச்சியான தட்பவெப்பம் உள்ள இடத்திலும் வியர்வை பெருக்கெடுத்தல், உடல் பிசுபிசுப்பு, நடக்கவும், மாடிப்படிகளில் ஏறவும் சிரமப்படுதல் உட்பட மூச்சுவிட கஷ்டப்படுதல், தலைசுற்றல், மயக்கம், படப்படப்பு இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.

இந்த அறிகுறிகள் ஒருவரின் உடலில் தென்படும்போது, உடனடியாக மேலே குறிப்பிடப்பட்ட உயிர் காக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், நடக்கவோ, ஓடவோ, வண்டி ஓட்டவோ கூடாது. படுத்துக்கொள்ள வேண்டும். இவை ரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, மாரடைப்பின் தீவிர தன்மையைக் கட்டுப்படுத்தும். பின்னர், காலதாமதம் செய்யாமல், ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் உடலில் தென்படும்போது, உட்கொள்ளும் மருந்துகள் ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற ஒரு மணிநேரத்தை 3 மணி நேரமாக மாற்றும் சக்தி கொண்டவை. 

ஒருவருக்கு மாரடைப்புஏற்படப் போவதை முன்னதாகவே எளிதாக அறிந்து கொள்ளமுடியும். இந்த அறிகுறிகள் ஒருவரின் உடலில் தென்படும்போது, உடனடியாக உயிர் காக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்...

 விஜயகுமார்