மார்பக புற்றுநோய்க்கு மார்பகத்தை அகற்ற வேண்டுமா?



* Doctor Bytes

ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் மனதில் தோன்றும் முதல் எண்ணம் அவர்களின் மார்பகத்தை அகற்றக்கூடும் என்பதுதான். போதிய விழிப்புணர்வு இல்லாததால், மார்பகத்தை அகற்றுவதே ஒரே வழி என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், புற்றுநோயை குணப்படுத்த மார்பகத்தை முழுவதுமாக அகற்ற வேண்டியதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


மார்பகப் புற்றுநோய்க்கு வெவ்வேறு வகையான அறுவை சிகிச்சைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நன்மைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு விதமான அறுவை சிகிச்சையின் நன்மை மற்றும் தீமைகள் குறித்த தகவல்களைப் பெற்று, அவற்றில் சரியானதைத் தீர்மானிக்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மிகவும் பொதுவான ஒரு புற்றுநோயாக மாறியுள்ளது. மேலும் இதில் தாமதமான நோய்க் கண்டறிதல்,பெண்களில் அதிக இறப்பு விகிதத்திற்கு வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

* நோய் என்பது கடவுளின் தண்டனை அல்ல!


நோய் என்பது கடவுள் கொடுக்கும் தண்டனை என்றே பழங்காலத்தில் நம்பிக்கைகள் நிலவி வந்தது. ஆனால், ‘நோய்கள் கடவுள் கொடுத்த தண்டனையல்ல, அது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளின் வேலை’ என்று கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டர். மனிதர்களின் ஆயுள் தற்போது அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணம் பாஸ்டரின் பல கண்டுபிடிப்புகளே என்றும் இவரைப் புகழ்கிறார்கள்.
- வி.ஓவியா