டியர் டாக்டர்



*பயனுள்ள மருத்துவத் துணுக்குகளை, சுவாரஸ்யமாக அள்ளித்தரும் ‘மெடிக்கல் ட்ரெண்ட்ஸ்’ பகுதி தொடரட்டும். ‘ஒற்றை தலைவலிக்கு முடிவே இல்லையா?’ கட்டுரை அதனால் பாதிக்கப்படும் பலருக்கும் உபயோகமாக இருந்திருக்கும். சில தகவல்கள் கண்டு வியந்தே போனேன். ஜப்பானியர்கள் கட்டுரை குறிப்பிடத் தகுந்ததாக இருந்தது. உலகிலேயே 100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்கள் அதிக சதவீதத்தினர் ஜப்பானில் இருப்பதும், அவர்கள் பின்பற்றும் உணவுப் பழக்கங்களை நாமும் பின்பற்றினால் நீண்ட நாள் வாழ முடியும் என்பதும் நல்ல ஆலோசனை. ‘வெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்’ காலத்துக்கேற்ற பயனுள்ள அறிவுரை. மிக மிக அருமை!
- சு. இலக்குமணசுவாமி, திருநகர், மதுரை.

*‘மனநலனுக்கு முக்கியத்துவமளித்து உளவியல் சிறப்பிதழ் வழங்கிய ‘குங்குமம் டாக்டருக்கு’ நன்றிகள் பல. உடலும், மனதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் மனநலனைக் கவனிக்க வேண்டியது அவசியம் என்ற விழிப்புணர்வை வலிமையாக சொல்லி இருந்தது கவர் ஸ்டோரி.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்

*உடல் நலத்திற்கு சற்றும் குறையாத முக்கியத்துவத்தினை மனநலனுக்கும் கொடுத்துப் பயனைடய வேண்டிய அவசர அவசியத்தினை ‘குங்குமம் டாக்டரின் ‘கவர் ஸ்டோரி’ வலியுறுத்தியிருந்தது. இன்று ஒவ்வொருவரும் பல்வேறுவிதமான சவாலில் இருப்பதால் மனநல ஆலோசனைகள் பெற்றுக் கொள்ள தயங்க வேண்டியதில்லை. அதை குறையாகவும் நினைக்க வேண்டியதில்லை என்பது புரிந்தது.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*கவர் ஸ்டோரியின் அட்டையும் சரி, உள்ளே சொன்ன விஷயங்களும் சரி... ஒரு மிகச்சிறந்த ஊக்க டானிக். வெயில் சீசனுக்கு ஏற்ற அம்மை நோய் பற்றிய கருத்துக்கள் பயனுள்ளது. பாத்ரூம் டிப்ஸ் ஐந்தும் ‘அட’ என ஆச்சரியப்படுத்தியது. இனி பாத்ரூம் விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். குழந்தை வளர்ப்பு பற்றிய Parantal Guide-ல் வெளிவந்த அந்த ஐந்து பக்கங்களும் பெற்றோர்களின் தலையில் சரியான ‘குட்டு’ வைத்திருக்கிறது.
- சிம்மவாஹினி, வியாசர் நகர்.

*‘செயல்படா காசநோய்’ பற்றிய முக்கியமான விஷயங்களை அலசித் தந்தது உண்மையில் அதிர்ச்சியாக இருந்தாலும், பல சந்தேகங்களை போக்கியது. 100 நாள் வாழும் ஜப்பானியர்களின் வாழ்க்கை ரகசியங்கள் பயனுள்ள தகவல்கள்.
- பாஸ்கரன், கள்ளக்குறிச்சி.