அமலாபால் மீது சித்தார்த்துக்கு காதல். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களில் அமலாபாலின் எரிச்சலுக்கு ஆளாகிறார் சித்தார்த். விளைவு, ஊடல் என்கிற எல்லையைத் தாண்டி காதலே ஊத்திக் கொள்ளும் நிலையை எட்டுகிறது.
'அப்படி நாம் என்னதான் தவறு செய்துவிட்டோம்,அமலாவின் அன்பை இழக்க?' என்று யோசிக்கிறார் சித்தார்த்.
அதைப் புரிந்து கொள்ள அவருக்கு நண்பனின் காதலி உதவுகிறார். அதன் காரணமாக அந்த நண்பனின் சந்தேகம், அவர்கள் காதலில் விரிசல் என்று போகிறது கதை.
பிறகு என்னவாகிறது? சித்தார்த், அமலாபால் காதல் கை கூடுகிறதா? உதவ வந்த நண்பனின் காதலி நிலை என்னவாகிறது? என்பதையெல்லாம் சுவாரஸ்யமாக விவரிக்கிறது படம்.
காதலர்கள் சிறு சிறு விஷயங்களில் ஒருவரையொருவர் எப்படியெல்லாம் தவறாகப் புரிந்து கொண்டு ஊடல் கொள்கிறார்கள் என்பதை வகுப்பு எடுப்பதைப் போன்று பாடம் நடத்துகிறது படம்.
அமலாபாலின் அப்பா - அம்மா டைவர்ஸ் வரை சென்று, மனம்விட்டுப் பேசுவதால் மீண்டும் ஒன்று சேர்வது கதைக்கு ஒரு கனம் சேர்க்கிறது. அதுதான் படம் சொல்ல வருகிற விஷயமும் கூட.
- பவானிமைந்தன்