சிலந்தி ஆடை



Chimil magazine, Chimil weekly magazine, Tamil Magazine Chimil, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               இந்தப் பெண் அணிந்திருக்கும் ஆடைக்கு Golden Cape என்று பெயர். மடகாஸ்கர் மலைகளில் காணப்படும் Female Gold. ORB- Weaves. என அழைக்கப்படும் ஒரு வகை சிலந்தியிலிருந்து இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சிலந்திப் பட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரே ஆடை இதுதான். இதை தயாரிக்க லட்சக்கணக்கான சிலந்திகள் தேவைப்பட்டனவாம்.

செக் குடியரசின் தலைநகரம் பிரெக்கிலிருந்து 65 கி.மீ தொலைவில் Kutna Hora உள்ளது. மத்திய காலத்தில சிறந்து விளங்கிய இந்த நகரத்திலுள்ள மாதா கோயில் 50,000 மனித எறும்பு துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த இடத்தில் பிளேக் நோயினால் ஆயிரக்கணக்கானோர் இறந்து அடக்கம் செய்யப்பட்டனர். பிற்காலத்தில் இதே இடத்தில் மாதா கோயில் கட்டியபோது கிடைத்த எலும்புகளைக் கொண்டு மாதாகோயில் அலங்கரிக்கப்பட்டதாம்.

மஹாபலிபுரம் கடற்கரையில் ஒரு காலத்தில் ஏழு கோயில்கள் இருந்ததாக ஐரோப்பிய மாலுமிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கரையில் ஒரே ஒரு கோயில்தான் இருக்கிறது. 1300 ஆண்டுகள் (கி.பி.700-728) பழமையான மஹாபலிபுரம் சிற்பங்களை உலகின் பழமையான பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னங்களில் ஒன்றாக யுனஸ்கோ அங்கீகரித்துள்ளது.

1860 களில் அமெரிக்க சுதந்திரச் சிலை பாரிசில் உருவாக்கப்பட்டு, துண்டு துண்டுகளாக கப்பல் மூலம் நியூயார்க்கிற்கு கொண்டு வரப்பட்டது. பாரிஸ் ஈபில் டவரை உருவாக்கிய அலெக்ஸாந்தர் கஸ்டவ் ஈபில்தான் இதையும் உருவாக்கினார். 46 மீட்டர் உயர இந்தச் சிலையின் தலை மட்டும் 3 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்டது.

கர்நாடக மாநிலம், தவண்கெரெ மாவட்டத்தில் பாகளியில் உள்ள காளீஸ்வரா கோயில் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது கஜுராகோ கோயிலைப் (மத்தியப் பிரதேசம்) போல் சிறப்பு வாய்ந்தது.

டைடானிக் கப்பல் பிரிட்டனில் South Ampton என்ற இடத்திலிருந்து அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தை நோக்கி 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 லிருந்து 15-இல் பயணம் செய்யும்போது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில¢ பனிக்கட்டியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1490 பயணிகளும் பணியாளர்களும் மடிந்தனர். டைடானிக் கப்பல் மூழ்கிய நூறாவது ஆண்டு இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கப்பலில் கிடைத்த சுமார் 5000 பொருட்க்கள் ஏலத்தில் விடப்படுகிறதாம்.

அரபு நாடுகளில் ரோபட்டுகளை ஒட்டகங் களை ஓட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள். சிறுவர்கள் ஒட்டகம் ஓட்டுவதற்கு அரசு தடை செய்ததால் ரோபட்டுகள் ஒட்டகங்களை ஒட்டப் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2001லிருந்து இப்பழக்கம் நிலவுகிறது.

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஊத்துக்குளி ஜமீன் அமைந்துள்ளது. இங்குள்ள அரண்மனை 800 ஆண்டுகள் பழமையானது.  37 தலைமுறைகளாக இங்குள்ள கலைப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு  500 ஆண்டுகள் பழமையான வாட்களும் கத்திகளும் நாணயங்களும் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஓடும் காளிங்கராயன் வாய்க்காலை வெட்டியவர் இந்த ஜமீனை ஆண்ட காளிங்கராயர் ஆவார்.
- க.ரவீந்திரன்