ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களின் குடும்பங்களிலிருந்தும் ஒரு மாபெரும் விளையாட்டு வீரன் உருவாகி, வாழ்வில் சகல வெற்றிகளையும் பெற இயலும் என்பதை எடுத்துச் சொல்லவே உருவான படம் இது.
பொன்வண்ணன் ஒரு சாதாரண கட்டிட மேஸ்திரி. பொழுது போக்காக கேரம் விளையாடுவார். அதில் நிறைய பணம் சம்பாதிக்கு மளவு கெட்டிக்காரரும் கூட. ஒருநாள் ஒரு அநாதைச் சிறுவனைப் பார்த்து, பரிவுடன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவன் பாசத்தோடு அவரிடம் ஒட்டிக் கொள்கிறான். கேரம் விளையாட்டிலும் ஆர்வம் காட்டுகிறாள். பொன்வண்ணன் சொந்த மகனைப் படிக்க வைக்கிறார். வளர்ப்பு மகனை விளையாட்டில் சூரப்புலியாக்குகிறார்.
கேரம் விளையாடி, வெற்றி, புகழ், பணம் என உயர்நிலை அடையும் பாலாஜி மீது பொன்வண்ணனின் சொந்த மகன் எரிச்சலடைகிறான். விளையாடப் போன இடத்தில் வில்லங்க வேலைகள் செய்யும் திவ்யா பத்மினி பிறகு பாலாஜியின் காதலியாகிறார்.
இந்தக் காதல் கைகூடியதா? பொன்வண்ணனின் மகன் கொண்ட எரிச்சலால் என்னென்ன விபரீதங் கள் உருவாகின்றன என்பதையெல்லாம் அருமையான காட்சிகளில் விவரிக்கிறார் இயக்குநர் விஜய் நந்தா.
- கௌதம நீலாம்பரன்