மருத்துவம் இல்லாவிட்டால்… துணை மருத்துவம் படிக்கலாம்!



வழிகாட்டல்

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்விக்குத்  திட்டமிடுங்கள்!

+2வுக்குப் பிறகு படிக்க மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற படிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நீட் (NEET) தேர்வில் தகுதி இருந்தால் தானே மருத்துவப் படிப்பில் சேர இயலும். நீட் தேர்ச்சி பெற்றாலும் தரமான கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் அரிது, ஏனெனில் ஒரு சில இடங்களே உள்ளதால். ‘இதற்கு ஒரு முடிவே இல்லையா? விடிவே இல்லையா?’ என்று புலம்ப வேண்டாம். நல்ல முடிவு இருக்கிறது. மருத்துவத் துறையில் பயில மிகப்பெரும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அது எப்படியென்றால், நீட் தேர்வு இல்லாமல் +2 மார்க் அடிப்படையில் மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில், துணை மருத்துவப் படிப்புகளில் பயில எண்ணற்ற ஏற்றமிகு வாய்ப்புகள் உள்ளன என்கிறார் உயர்கல்வி ஆலோசகர் ரெ.பாஸ்கரன். அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

துணை மருத்துவப் படிப்பானது 4½ ஆண்டு தொழிற்கல்வி படிப்புகள், மூன்றாண்டு பட்டப்படிப்புகள், ஒரு வருடப் பட்டய மற்றும் 6 மாதச் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம், ஆய்வகத் தொழில்நுட்பம் உள்பட 23-க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் படிப்புகள் விவரம் இதோ :-

மருந்தியல் - மருந்தாக்கவியல்
மருந்தாளுநர்: - துணை மருத்துவம்
மருந்தியலில் 2 வருடப் பட்டயப்படிப்பு (D.Pharm) 4 வருட பட்டப்படிப்பு (B.Pharm) சேர்ந்து படிக்கலாம். +2 Science Group, Bio-Maths group, Computer Science group சேரத் தகுதியானவர்கள். நீட் வேண்டியதில்லை. மருந்தியல் படித்தால் மருந்தாளுநர் (Pharmacist) பதவிக்குத் தகுதியானவர்கள். முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், கை நிறைய சம்பளத்துடன் பணிபுரியலாம். மல்ட்டி, சூப்பர் ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல்களில் மருந்தாளுநராகப் பணிபுரியலாம்.

அரசு வேலை - மத்திய, மாநில அரசுத் துறையில் மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் ஆய்வாளர் மற்றும் உதவி இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர் பதவிகளில் அமரலாம்.

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ரயில்வே, மிலிட்டரி, ESI, CRPF மருத்துவமனைகளில் மருந்தாளுநராகப் பணியாற்றலாம். MNC - பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கும் மருந்துகளைப் பற்றி எடுத்துரைக்கும் Medical Detail Man ஆக கைநிறைய சம்பளத்துடன் பணிபுரியலாம். சொந்தமாக மெடிக்கல் ஸ்டோர் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனம் தொடங்கலாம். மேலும் 4 வருட பட்டம் பெற்றால் (B.Pharm) மத்திய, மாநில அரசாங்க GROUP- I to IV தரத்திலான பணி வாய்ப்புகளுக்குப் பரிட்சை எழுதத் தகுதியானவர்கள்.

செவிலியர் (நர்சிங்)  துணை மருத்துவம்

செவிலியர் துறையில் 3 வருட பட்டயப்படிப்பு (D.N.M - Diploma in General Nursing and Midwifery) 4 வருட பட்டப்படிப்பு (B.Sc Nursing) படித்தால் செவிலியர் வேலை கைநிறைய சம்பளத்துடன் தனியார் மற்றும் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளிலும், ரயில்வே, மிலிட்டரி, CRPF மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செவிலியராகப் பணிபுரியலாம்.

B.P.T - பிஸியோதெரபி பட்டப்படிப்பு - 4 வருடங்கள்

இயன் மருத்துவர் ஆகலாம். உடற்பயிற்சி சிகிச்சை மருத்துவர். இன்றைய பிஸியான வாழ்க்கையில் இவர்களின் சேவை மிகவும் இன்றியமையாதது.
BOT - Bachelor of Occupational Therapy பட்டப்படிப்பு - 4 வருடங்கள் தொழிற்சிகிச்சை மருத்துவர் - மனிதனின் வாழ்க்கையைச் சுறுசுறுப்பாக எளிதாக்கி திறமையுடன் நகரவைக்கும் சிகிச்சைக்கானது.

மேலும் சில துணை மருத்துவப் படிப்புகள்

(Allied Health Sciences), B.ASLP - Bachelor of Audiology Speech Language Pathology (பேச்சுப் பயிற்சி), B.Sc ரேடியாலஜி - X Ray (கதிரியக்க சிகிச்சை), B.Sc Imaging Technology (காந்தவியல் தொழில்நுட்பம்)- CT Scan, MRI Scan, Doppler Scan, B.Sc - டையாலிசிஸ் டெக்னாலஜி (சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு), B.Optometry - கண் கண்ணாடித்துறை, B.Sc - இதய நுரையீரல் டெக்னீசியன்

B.Sc - Accident and Emergency Care (விபத்து, அவசர சிகிச்சை டெக்னீசியன்),B.Sc - Medical Laboratory Technology (மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜி),B.Sc - Physician Assistant (மருத்துவ உதவியாளர்)B.Sc - கிரிட்டிக்கல் கேர் டெக்னாலாஜி, B.Sc - மெடிக்கல் சோசியாலஜி, B.Sc - மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ், B.Sc - ஆபரேசன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி, B.Sc - நியுக்ளியர் மெடிசின் டெக்னாலஜி
B.Sc - ரெஸ்ப்ரேட்டரி தெரபி, B.Sc - நியூரோ எலக்ட்ரோ பிஸியாலஜி என பல உள்ளன.

கல்வித் தகுதி: +2-வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் (அல்லது) இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது ஏதேனும் ஒரு பாடத்துடன் கணிதம் உள்ள பிரிவை எடுத்துப் படித்து 40 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.

எவ்வாறு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்?

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tnhealth.org, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களின் மூலமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘செயலர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா., பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை  10’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பித்த மாணவர்கள் ஒற்றைச்சாளர முறையில் +2 வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒற்றைச்சாளர முறைப்படி, பொதுப்பிரிவினருக்கு 31 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 விழுக்காடும், ஆதிதிராவிடர்களுக்கு 18 விழுக்காடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

எங்கு படிக்கலாம்?

B.Sc (Nursing)
    1,சென்னை மெடிக்கல் காலேஜ்
    2.மதுரை மெடிக்கல் காலேஜ்
    3.செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்
    4.சேலம் மெடிக்கல் காலேஜ்
    5.தேனி மெடிக்கல் காலேஜ்
B.Pharm
    1.சென்னை, மதுரை, அரசு
மருத்துவக் கல்லூரிகள்
B PT1. கே.கே.நகர் காலேஜ் ஆப் பிசியோதெரபி    2.திருச்சி பிசியோதெரபி அரசுக் கல்லூரி
B.A.S.L.P  1.சென்னை அரசு மருத்துவக் கல்லூரிB.Sc (Radiology & Imaging Technology)
1.சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,
2.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிB.Sc (Radio Therapy Technology).
சென்னை மருத்துவக் கல்லூரிB.Sc (Cardio Pulmonary Perfusion Technology)சென்னை மருத்துவக்கல்லூரி,
B.Optom (Bachalor of Ophthalmology)சென்னை மருத்துவக் கல்லூரி

யிலுள்ள ரெஜினால் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்தோமாலஜி அண்ட் ஹாஸ்பிட்டல் இவை தவிர, சுயநிதி, நான்-மைனாரிட்டி கல்வி நிறுவனங்களின் 65 விழுக்காடு இடங்களும், மைனாரிட்டி நிறுவனங்களின் 50 விழுக்காடு இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படும்.

மருத்துவ சேவை குறைபாடின்றி மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டுமெனில் துணை மருத்துவம் (Para Medical) படித்தவர்கள் ஏராளமாக தேவைப்படுகிறார்கள். அதே சமயம் சேவை மனப்பான்மையுடன் நல்ல சம்பளமும் வேலையும் கிடைக்கக்கூடிய ஒரே துறை மருத்துவத் துறைதான்.

- தோ.திருத்துவராஜ்