பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை! 242 பேருக்கு வாய்ப்பு!வாய்ப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Tamil Nadu Pollution Control Board) சுருக்கமாக TNPCB என்று அழைக்கப்படுகிறது. இவ்வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலியாக உள்ள உதவிப் பொறியாளர், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 4 விதமான பதவியிடங்களுக்கு 242 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயதுவரம்பு விவரங்களைப் பார்ப்போம்...

பணி : உதவிப் பொறியாளர் - Assistant Engineer பணிக்கு மொத்தம் 78 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிவில், கெமிக்கல், சுற்றுச்சூழல் பிரிவில் எஞ்சினியரிங் முடித்திருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : சுற்றுச்சூழல் விஞ்ஞானி - சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிக்கு மொத்தம் 70 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிக்கு வேதி
யியல், உயிரியல், தாவரவியல், சுற்றுச்சூழல் வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச் சூழல் டாக்ஸிகாலாஜி (Environmental Toxicology), நுண்ணுயிரியல், மரைன் பயாலஜி, உயிரி-வேதியியல், அனாலிட்டக்கல் கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, விலங்கியல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவியாளர் (இளநிலை உதவியாளர்) - Assistant பணிக்கு மொத்தம் 38 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மேலும் கணினி படிப்பில் குறைந்தபட்சம் 6 மாதம் டிப்ளமோ / சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தட்டச்சர் - Typewriter பணிக்கு 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிகிரி முடித்திருக்க வேண்டும். அரசு தட்டச்சுத் தொழில்நுட்பத் தேர்வில் தமிழ், ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினிப் படிப்பில் 6 மாத காலம் டிப்ளமோ, சர்டிபிகேட் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட TNPCB Recruitment 2020 பணிகளுக்கு 12.2.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதி, ஆதி(அ), பி.வ., மி.பி.வ / சீம, பி.வ, பி.வ(மு) பிரிவினர் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு உச்சவயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

தேர்வுக் கட்டணம்: மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), இதர வகுப்பினருக்கான தேர்வுக் கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அ), ப.வ, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ரூ. 250 தேர்வுக் கட்டணம் செலுத்தினால் போதுமானது.மேலும் முழு விவரங்களுக்கு www.tnpcb.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

-முத்து