பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!அட்மிஷன்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Central Institute of Plastic Engineering & Technology (CIPET) 1968ம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த துறைகளில் நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், சர்வதேசத் தரத்திலான தொழில்முறை பயிற்சிகளை  வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது இக்கல்விநிறுவனம்.

மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையின் நேரடி கண்காணிப்பில் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டுவரும் இந்நிறுவனம் தற்போது கொச்சி, சென்னை, மைசூரு என மொத்தம் 37 இடங்களில் இயங்கிவருகிறது. இந்நிறுவனங்களில் 2020 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வழங்கும் படிப்புகள்

மூன்று வருட டிப்ளோமா படிப்பான Diploma in Plastics Moulding Technology (DPMT), மூன்று வருட டிப்ளோமா படிப்பான Diploma in Plastics Technology (DPT),   இரண்டு வருட Post-Graduate Diploma in Plastic Processing & Testing (PGD-PPT) மற்றும்  ஒன்றரை வருட Post Diploma in Plastic Mould Design with  CAD/ CAM (PD-PMD with CAD/CAM) ஆகிய நான்கு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

கல்வித் தகுதி

டிப்ளமோ படிப்புகளான DPMT, DPT போன்றவற்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். முதுகலை டிப்ளமோ படிப்பான PGD-PPTயைத் தேர்ந்தெடுக்க விரும்புவோர் அறிவியல் துறையில் மூன்று வருட இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். PD-PMD with CAD/CAM படிப்புகளுக்கு Mechanical / Plastics / Tool / Polymer / Production / Mechatronics / Automobile போன்ற துறைகளில் மூன்று வருட டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை முறை

இந்நிறுவனத்தால் நடத்தப்படும் கணினி சார்ந்த எழுத்துத் தேர்வு (Computer Based Test (JEE-2020)) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அகில இந்திய அளவில் 31.5.2020 அன்று இதற்கான தேர்வு நடைபெறும். பாட வகுப்புகள் 1.7.2020 அன்று தொடங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://eadmission.cipet.gov.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 22.5.2020.
மேலும் விரிவான தகவல்களுக்கு https://www.cipet.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- துருவா