வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் வேலை!

நிறுவனம்: இஸ்ரோ எனப்படும் இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி துறையின் கிளை நிறுவனமான யு.ஆர்.ராவ் சாட்டிலைட் சென்டரில் வேலை
வேலை: பல்வேறு துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 183
கல்வித் தகுதி: 10வது படிப்புடன் ஐ.டி.ஐ, எஞ்சினியரிங் டிப்ளமோ, அறிவியல் மற்றும் கலைப் பாடங்களில் டிகிரி, டிரைவிங் படிப்பு, ஹோட்டல் துறையில் படிப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருந்தால் இதில் பொருத்தமான ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 ஆக இருந்தாலும் அதிகபட்ச வயது சிலவற்றுக்கு 26 அல்லது 35 என வேலைக்கு ஏற்ப குறிப்பிடப்பட்டுள்ளது
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.3.2020
மேலதிக தகவல்களுக்கு: https://www.ursc.gov.in

எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் மருத்துவமனை
மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் டெல்லி
கிளையில் வேலை
வேலை: சயின்டிஸ்ட், டெக்னீஷியன், ஸ்டெனோ, ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் உட்பட
பல்வேறு துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 430
கல்வித் தகுதி: மருத்துவத் துறைகளில்
பிஎச்.டி, முதுகலை, டிகிரியும் பி.ஏ, பி.டெக், +2 படிப்பு
களில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் பொருத்தமான வேலைகளுக்கு விண்ணபிக்கலாம்
வயது வரம்பு: 27 முதல் 45 வரை
தேர்வு முறை: எழுத்து, நேர்முகம் மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.3.2020
மேலதிக தகவல்களுக்கு: https://www.aiims.edu/en.html

ஏர் இண்டியா நிறுவனத்தில் அக்கவுன்டன்ட் வேலை

நிறுவனம்: ஏர் இண்டியாவின் ஏர்லைன்ஸ் அலைடு சர்வீசஸ் லிமிடெட் எனும் அரசு விமானச் சேவை நிறுவனத்தில் வேலை
வேலை: சூப்பர்வைசர், ஃப்ளைட் டெஸ்பேட்சர், ஆஃபிசர் உட்பட பல்வேறு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 87
கல்வித் தகுதி: சார்ட்டட் அக்கவுன்டன்ட், ஐ.சி.
டபிள்.யு, எம்.பி.ஏ., பி.டெக், பி.இ   உட்பட வேலைப்  பிரிவுகளுக்குப் பொருத்தமான படிப்புகளில் தேர்ச்சி
வயது வரம்பு: வயது உச்சவரம்பு 40, 45, 50 மற்றும் 70 கூட இந்த வேலைகளைப் பொறுத்து குறிப்பிடப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.3.2020
மேலதிக தகவல்களுக்கு: www.airindia.in

ஆயுதப்படையின் நீதி விசாரணைப் பிரிவில் வேலை!

நிறுவனம்: ஆர்ம்டு ஃபோர்ஸ் டிரிப்யூனல் எனும் ராணுவ அதிகாரிகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் வேலை
வேலை: ஜுனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட் உட்பட பல பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 100
கல்வித் தகுதி: அந்தந்த வேலைப் பிரிவுகள் தொடர்பாகப் பட்டப்படிப்பு
வயது வரம்பு: 56-க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.3.2020
மேலதிக தகவல்களுக்கு: www.aftdelhi.nic.in

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் பணி!

நிறுவனம்: என்.எச்.ஏ.ஐ எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை
வேலை: மேனேஜர் மற்றும் டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர்
காலியிடங்கள்: மொத்தம் 170. இதில்
மேனேஜர் வேலையில் 46 மற்றும் ஜெனரல்
மேனேஜர் வேலையில் 124 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: சிவில் எஞ்சினியரிங் இளநிலைப் பட்டப்படிப்பு
வயது வரம்பு: 56-க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.3.2020
மேலதிக தகவல்களுக்கு: www.nhai.gov.in

இந்திய தர நிர்ணயத் துறையில் வேலை

நிறுவனம்: மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய தர நிர்ணய அமைப்பு
வேலை: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (லேபாரட்டரி), சீனியர் டெக்னீஷியன்.
காலியிடங்கள்: மொத்தம் 50. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (லேபாரட்டரி) 30, சீனியர் டெக்னீஷியன் 20.
கல்வித் தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
பதவிக்கு பி.எஸ்சி., (வேதியியல், மைக்ரோ
பயாலஜி, இயற்பியல், பயோ - டெக்னாலஜி, உணவு தொழில்நுட்பம், பயோ கெமிஸ்ட்ரி) என ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்) முடித்திருக்க வேண்டும். சீனியர் டெக்னீஷியன் பதவிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிக்கு 18 -30, சீனியர் டெக்னீஷியன் பதவிக்கு 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.3.2020
மேலதிக தகவல்களுக்கு: https://bis.gov.in