அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

DEGREES OF COMPARISON  PART  TWO  


ரகுவின் இருக்கையை நோக்கி வந்த ரவி, “Latha is taller than Indira’ என்ற Comparative degreeக்கு ‘Indira is not as tall as Latha’ என்பது positive degree இல்லைங்களா சார்? அப்படின்னா அதோட  Superlative degree என்னங்க சார்? Latha is the tallest அல்லது Indira is the tallest என எப்படிப் போட்டாலும் அர்த்தம் சரியா வரமாட்டேங்குதுங்க சார்” என்றான்.

புன்சிரிப்புடன் பார்த்த ரவியைப் பார்த்த ரகு,“You are in the right rung of learning ladder Ravi! இதுக்கு சூப்பர்லெடிவ் டிக்ரி கிடையாது. ஏன்னா… இருக்கறது ரெண்டே ரெண்டு பேர். அதனால positive and comparative degree மட்டும்தான். You cannot apply a superlative degree when only two entities are in fray.” என்றார்.

மேலும் தொடர்ந்த ரகு, “There are three models of conversion Ravi and they are 1) ONE OF THE TWO 2) Only ONE TOP IN THE GROUP and 3) ONE AMONG PEER IN THE GROUP. அதாவது, 1) இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும் ஒப்பிடுதல், 2) உச்சம் ஒன்று தான், 3) சம உச்சங்கள் பல. நாம இதுவரையில் டிஸ்கஸ் பண்ணினது முதல்மாதிரி. River Godavari is longer than River Narmada. என்பதற்கான அடுத்த ஒப்புமைப் படிவம். River Narmada is not as long as River Godavari என்பதாகத்தான் இருக்க முடியும்.

அடுத்தது Only ONE TOP IN THE GROUP (உச்சம் ஒன்றுதான்) என்ற படிவம். உதாரணத்துக்கு நம்ம அலுவலகத்தில் மொத்தம் 86 பேர் உள்ளனர். உயரத்தை வைத்துப் பார்த்தால் கோபி மட்டுமே ஆறடி இரண்டு அங்குலத்தில் இருக்கிறார். அவரளவுக்கு யாரும் உயரம் இல்லை. இந்தச் சூழ்நிலையில்  Gopi is the tallest man in this office எனலாம். (Superlative form இது). இதனுடைய Comparative form என்ன?...கோபி மற்ற எவரையும் விட உயரமாக இருக்கிறார் எனப் பொருள்தரும் .

அதாவது, Gopi is taller than any other man in the office.  சரி!  இதன் Positive degree என்ன?...கோபியின் அளவுக்கு யாரும் உயரம் இல்லை. அதாவது No one is as tall as Gopi in the office. (or) None is so tall as Gopi in the office. என்றும் சொல்லலாம்.Only ONE TOP IN THE GROUP Modelலில் Positive degreeயில் no one என்ற phraseம் Comparative degreeயில் than any other என்ற phraseம் உபயோகப்படுத்துகிறோம். அப்பதான் பொருள் மாறாமல் ஒப்புமை சரியாக வரும். சரி! அடுத்த மாடலை நாளை விளக்குகிறேன்” என்றவாறே எழுந்தார். வீட்டுக்குப் புறப்பட்டார் ரகு.

சேலம் ப.சுந்தர்ராஜ்

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com