வேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்!



ஆலோசனை

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைப்பது இன்று குதிரைக் கொம்பாகக் காணப்படுகிறது. அதிலும், பொறியியல் போன்ற படிப்புகள் படிப்பதும், படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் அவ்வளவு எளிதல்ல எனப் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், ‘‘இந்தக் கருத்து தவறானது தரமான கல்லூரி மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் படிப்புகளைப் பொறுத்தே வேலைவாய்ப்பு அமைகிறது’’ என்கிறார் ஸ்ரீ ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் ஜெயராம் சேகர். அவர் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்…

‘‘கடந்த சில வருடங்களாகவே படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்ற பேச்சு இளைஞர்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. அதற்குக் காரணம் கடந்த சில வருடங்களாக Mechanical Engineer, Civil Engineer, Electrical Engineer அதிகம் உருவாகிவிட்டதுதான். இந்தப் படிப்பு படித்த ஒரு சில எஞ்சினியர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது.

ஆனால், இன்றையச் சூழலில் அதிக வேலைவாய்ப்பு தரக்கூடிய எஞ்சினியரிங் பாடப்பிரிவுகளும் ஏராளம் உள்ளன. உதாரணமாக, Agricultural Engineering, Bio Medical Engineering, Food Technology போன்றவை அதிக வேலைவாய்ப்புக்கு தகுதியான பாடப்பிரிவுகளான இவற்றைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்புகளை முடிப்பவர்களுக்கு  பல்வேறு துறைகளிலும் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற பட்டப்படிப்புகள் படித்த எஞ்சினியர்கள் நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் குறைவாகவே உள்ளனர்.

இந்த மூன்று பாடப்பிரிவுகளைப் படிப்பதனால் டிஸ்ட்ரிக்ட் அக்ரிகல்சுரல் எஞ்சினியர்,  பயோ பிராசஸ் எஞ்சினியர் , ஃபுட் டெக்னாலஜிஸ்ட், புரொடக்‌ஷன் எஞ்சினியர், பயோ மெடிக்கல் எஞ்சினியர் அண்ட் மெடிக்கல் கோடர்  போன்ற வேலைகளுக்குச் செல்லலாம். அதற்கான வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன’’ என்கிறார் ஜெயராமன்.

படிப்பை முடித்ததும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தங்கள் கல்வி நிறுவனம் செயல்படும் விதத்தை கூறும்போது, ‘‘எங்களது கல்வி நிறுவனத்தில் Agricultural Engineering, Bio Medical Engineering, Food Technology பாடப்பிரிவுகள் அனுபவமுள்ள திறமையான பேராசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

எங்களின் நோக்கம் ஓர் எதிர்கால தொலைநோக்கு கண்ணோட்டதுடன்கூடிய வேலைவாய்ப்பை சமுதாயத்தில் அடித்தட்டு நிலைமையில் இருக்கும் ஏழை எளியோருக்கு உருவாக்கிக் கொடுப்பதே. நம் மக்களின் மேம்பாட்டுக்காகவே இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது.

எங்களது நிறுவனத்தில் மாணவர்களுடைய திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு  நடைமுறை பயிற்சி மற்றும் பேச்சுத் திறன் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சிகள் அவர்களுடைய லட்சியக் கனவை நனவாக்குவதற்கு முயற்சி உதவுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் எங்கள் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் 100% வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்றே சொல்லலாம்.

கடந்த ஆண்டு பன்னாட்டு ஐடி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து அவர்களுடைய வாழ்வை வளமாக்க திட்டமிட்டுள்ளோம்.’’ என்று தங்கள் எதிர்காலத் திட்டத்தையும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய பொறியியல் பட்டப்படிப்புகளை சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும் ஏற்படுத்திய பெருமை Food Technology Agriculture And Bio Medical எங்கள் கல்லூரியையே சாரும். இந்தப் பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.

எங்கள் கல்லூரியில் வழக்கமான பாடத்திட்டத்துடன் மாணவர்களுக்கு நேரடி அனுபவம் பெறுவதற்காக பல முன்னணி நிறுவனங்களும் வந்து நேரடி அனுபவப் பயிற்சி கொடுத்து வருகிறது. வரும் ஆண்டுகளிலும் இத்துறையில் இன்னும் சிறப்பாகச் செயல்படும் பல முன்னணி நிறுவனங்களை அழைத்து வந்து நேரடிப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் திறமை மிக்க வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. மேலும் உலகத் தரம்வாய்ந்த சோதனைக் கூடம், கருவிகள், நூல்கள், தகவல்தொடர்பு சாதனங்கள் என கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதன் மூலம் தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது.

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் இருப்பதுபோன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைதியான சூழல் மற்றும் சத்தான உணவுகளை வழங்க உணவு விடுதி போன்றவைகளை சுத்தமாக வைத்து பராமரித்து வருகிறோம்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள Agricultural Engineering, Bio Medical Engineering, Food Technology ஆகிய பட்டப்படிப்பு பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 75,000 முதல் 1,00,000 லட்சம் டாலர் வரை சம்பாதிக்கலாம். இத்துறையில் ஒவ்வொரு வருடமும் 10 முதல் 25 சதவிதம் வரை மாணவர்களுடைய வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது’’ என்றார் நிறைவாக.

- திருவரசு