வேளாண்மைப் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பித்துவிட்டீர்களா?
அட்மிஷன்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University - TNAU) 1971-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது. வேளாண்மைத்துறை முன்னேற்றத்தில் இப்பல்கலைக்கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையின் முன்னேற்றத்திற்குத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முழுமுதற் பொறுப்பு என்றால் மிகையாகாது. இப்பல்கலைக்கழகம் வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவைகள் போன்றவற்றை வழங்குகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், 12 இளநிலைப் படிப்புகள் உள்ளன. மொத்தம் 3,422 இடங்களுக்கு 65 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலையாலும், 35 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்பட்டுவருகிறது.
இப்பல்கலைக்கழகம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, பல்வேறு விவசாயப் படிப்புகளில் சேர்வதற்கான வழிமுறைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் உள்ள இளநிலைப் பட்டப்படிப்புகள்
1. இளநிலை அறிவியல் (ஹானர்ஸ்) விவசாயம் - B.Sc. (Hons) Agriculture 2. இளநிலை அறிவியல் (ஹானர்ஸ்) தோட்டக்கலை - B.Sc. (Hons) Horticulture 3. இளநிலை அறிவியல் (ஹானர்ஸ்) வனவியல் - B.Sc. (Hons) Forestry 4. இளநிலை அறிவியல் (ஹானர்ஸ்) (உணவு, நியூட்ரிசியன், டயட்டிக்ஸ்) - B.Sc. (Hons) (Food, Nutrition, Dietics) 5. இளநிலை அறிவியல் (ஹானர்ஸ்) பட்டுப்பூச்சி வளர்ப்பு - B.Sc. (Hons) Sericulture 6. இளநிலை தொழில்நுட்பம் (விவசாயம், பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering) 7. இளநிலை தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பம்) - B.Tech. (Bio Technology) 8. இளநிலை தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புற பொறியியல்) - B.Tech. (Energy and Environmental Engineering) 9. இளநிலை தொழில்நுட்பம் (பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ்) - B.Tech. (Bio Informatics) 10. இளநிலை தொழில்நுட்பம் (உணவு தொழில்நுட்பம்) - B.Tech. (Food Technology) 11. இளநிலை அறிவியல் (விவசாய வணிக மேலாண்மை) - B.Sc., (Agri Business Management) 12. இளநிலை தொழில்நுட்பம் (விவசாய செய்தி தொழில்நுட்பம்) B.Tech. (Agricultural Information Technology)
பாடப்பிரிவுகள் உள்ள கல்லூரிகள்
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்புக் கல்லூரிகளிலும், 26 அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளிலும் உள்ளன.
1. அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கோயம்புத்தூர் 2. ஹார்ட்டிகல்ச்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கோயம்புத்தூர் 3. அக்ரிகல்ச்சுரல் எஞ்சினியரிங் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கோயம்புத்தூர் 4. ஸ்கூல் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடிஸ் - கோயம்புத்தூர் 5. அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - மதுரை 6. ஹோம் சயின்ஸ் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - மதுரை 7. அக்ரிகல்ச்சுரல் எஞ்சினிரியங் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் குமுளூர் - திருச்சி 8. அன்பில் தர்மலிங்கம் அக்ரிகல்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - திருச்சி 9. பெண்களுக்கான ஹார்ட்டிகல்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - திருச்சி 10. அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கள்ளிக்குளம் - திருநெல்வேலி 11. ஹார்ட்டிகல்ச்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - பெரியகுளம் தேனி 12. ஃபாரஸ்ட் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - மேட்டுப்பாளையம் 13. அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - ஈச்சங்கோட்டை - தஞ்சாவூர் 14. அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - குடுமியான் மலை - புதுக்கோட்டை 15. அக்ரிகல்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - வாழவச்சானூர்- திருவண்ணாமலை
தனியார் கல்லூரிகள்
1. ஆதிபராசக்தி அக்ரிகல்ச்சுரல் காலேஜ் - கலவை - வேலூர் 2. ஆதிபராசக்தி ஹார்ட்டிகல்ச்சுரல் காலேஜ் - கலவை - வேலூர் 3. தந்தை நோலர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் அண்ட் ரூரல் டெவலப்மென்ட் - பெரம்பலூர் 4. வானவராயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரிகல்சுரல் - மணக்கடவு - பொள்ளாச்சி 5. இமயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரி கல்ச்சுரல் அண்ட் டெக்னாலஜி - கண்ணனூர் - துறையூர் - திருச்சி 6. பி.ஜி.பி. காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ் - நாமக்கல் 7. ஆர்.வி.எஸ் அக்ரிகல்ச்சுரல் காலேஜ் - உசிலம்பட்டி - தஞ்சாவூர் 8. காலேஜ் ஆஃப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜி - குள்ளபுரம் - தேனி 9. குமரகுரு இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் - சக்தி நகர் - ஈரோடு 10. ஜே.கே.கே. முனிராஜா காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ் - டி.என். பாளையம் - கோபி (ஈரோடு) 11. டான் பாஸ்கோ காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் - தக்கோலம் - அரக்கோணம் 12. ஆர்.வி.எஸ் பத்மாவதி காலேஜ் ஆஃப் ஹார்ட்டிகல்ச்சர் - செம்பட்டி - திண்டுக்கல் 13. ஜே.எஸ்.ஏ காலேஜ் ஆஃப் அக்ரிகல்சுரல் அண்ட் டெக்னாலஜி பொடையூர் - திட்டக்குடி 14. எஸ்.ஆர்.எஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரிகல்சுரல் அண்ட் டெக்னாலஜி - வேடசந்தூர் - திண்டுக்கல் 15. எஸ்.தங்கப்பழம் அக்ரிகல்ச்சுரல் காலேஜ் - வாசுதேவநல்லூர் - திருநெல்வேலி 16. சேது பாஸ்கரா அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அண்ட் ரிசர்ச் ஃபவுண்டேஷன் - விசலயான்கோட்டை - காரைக்குடி 17. நம்மாழ்வார் காலேஜ் ஆஃப் அக்ரி கல்ச்சுரல் அண்ட் டெக்னாலஜி- கமுதி - ராமநாதபுரம் 18. அதியமான் காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் அண்ட் ரிசர்ச்- ஆதிமுகம் - ஓசூர் 19. கிருஷ்ணா காலேஜ் ஆஃப் அக்ரிகல்சுரல் அண்ட் டெக்னாலஜி- உசிலம்பட்டி 20. இண்டியன் அக்ரிகல்ச்சுரல் காலேஜ் ராதாபுரம்- திருநெல்வேலி. 21. நாலந்தா காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் நெடுங்கூர்- திருச்சி 22. அரவிந்தர் அக்ரிகல்ச்சுரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - திருவண்ணாமலை 23. பாலார் அக்ரிகல்ச்சுரல் காலேஜ் மயில்பட்டி- வேலூர் 24. தனலக்ஷ்மி சீனிவாசன் அக்ரிகல்ச்சுரல் காலேஜ் - பெரம்பலூர் 25. மதர் தெரசா காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் - புதுக்கோட்டை 26. புஷ்கரம் காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் சயின்ஸ் - புதுக்கோட்டை
கல்வித் தகுதி: இளநிலை விவசாயப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க +2இல் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல் பாடங்களை எடுத்து குறைந்தபட்சம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 1.7.2018 அன்றைய தேதி வரை 21 வயது நிரம்பாதவர்களாக இருக்க வேண்டும். இவ்விதி ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் ஆகியோருக்கு தளர்த்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்படிப்புகளுக்கு www.tnau.ac.in/admission.html என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை இணையதள வங்கி சேவை அல்லது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழியாக செலுத்தலாம்.
இத்தகைய வசதிகள் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானை பயன்படுத்தி எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தை செலுத்தலாம். தரவரிசைப் பட்டியல், ஜூன் 22ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
பொதுப்பிரிவினர் ரூ.600 மற்றும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் ரூ.300 விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.06.2018 மாணவர்கள் தேர்வு முறை: மாணவர்கள் +2-இல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படி ஆன்லைன் கவுன்சலிங் வழியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்: இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 17.06.2018 தரவரிசை பட்டியல் வெளியீடு 22.06.2018 முதல்கட்ட கலந்தாய்வு கூட்டம் ( இணையதள வழியில் ) 09.07.2018 to 13.07.2018 இரண்டாம்கட்ட கலந்தாய்வு 23.07.2018 & 27.07.2018 தகவல் தொடர்பிற்கு: Dean (Agriculture) and Chairman Admissions Help Desk - Phone : 0422 6611345/6611346 email : ugadmissions@tnau.ac.in web : www.tnau.ac.in/admission.html
|